பக்கம்:தீபம் யுகம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 1 C3 17. ஓர் புதிய சிந்தனை நிறுவனம் நா. பா. வின் மற்றுமோர் இலட்சிய முயற்சியாக 1969 ஜனவரி யில் பவர்' எனும் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. இது குறித்து நா. பா. தீபத்தில் எழுதிய விளக்கம் இங்கு முழுமையாகத் தரப்படுகி நிது. இந்த 1969ம் ஆண்டு ஜனவரி முதல் தேதியன்று கவிஞர்கள், இலக்கியச் சொற்பொழிவாளர்கள், எழுத்தாளர்கள், கல்வி நிபுணர் கள், வாசகர்கள், ஆகிய ஐம்பெரும் இலக்கியக் குழுவினரையும் உள்ளடக்கிக் கொண்டு சென்னையில் ஒரு புது நிறுவனம் தோன்றி யுள்ளது. மிகப் பெரிய பி. இ. என். போல இந்நிறுவனம் உருவாகி யுள்ளது. கவிஞர்கள் (Poets), சொற்பொழிவாளர்கள்(Orators),எழுத்தா ளர்கள் (Writers) கல்வி fluoričát(Edicationists),airäffsäiskeaders),என்ற இப்பதங்களின் முதலெழுத்துக்களை ஒன்று சேர்த்து பவர்(Power),என இந்நிறுவனத்திற்குப் பெயர் சூட்டியுள்ளோம். "பவர்' எனும் தமிழ்ச் சொல்லுக்கு இணைந்து வழங்குதல் என்று பொருள். Power என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு ஆற்றல் என்று பொருள். மேற்கண்ட துறைகளில் ஆற்றலும் இணைந்து நெருங்கும் தன்மையுள்ளவர்களின் சங்கமாக இது இப்போது தொடங்குகிறது. இரசிகர்களும் எழுத்தாளர்களும் கவிஞர்களுக்கும் பேச்சாளர் களுக்கும் கல்வி நிபுணர்க்கும் பயன்படும் உயர்தரமான "ரெஃ பான்ஸ் லைப்ரரி ஒன்றை நடத்துவதோடு, கவிஞராக, எழுத்தாள ராக, விமர்சகராக ஆர்வப்படுவோருக்கு முறையான வழிகாட்டும் வகுப்புகள் சிலவற்றை அனுபவமிக்கோரைக் கொண்டு 5 #ğltb(Madras School of Modern Literature),$Li Guortangib QË நிறுவனத்திற்கு உண்டு. கருத்துப் பரிமாற்றம், சுமுகமான கலந்துரை யாடல், இலக்கியப் பரிவர்த்தனை, அண்டை மொழியாருடன் உறவு போன்ற நோக்கங்களும் பவருக்கு உண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_யுகம்.pdf/104&oldid=923192" இலிருந்து மீள்விக்கப்பட்டது