பக்கம்:தீபம் யுகம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# தீபம் யுகம் 5。 நெஞ்சக்கனல், செய்திகள், பொய்ம்முகங்கள், ஆசாரக்கள்ளர்கள் போன்ற நாவல்களை அவரால் எழுத முடிந்தது. அவை தீபத்தில் இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றையும், அதில் ஈடு பட்ட ஒரு இலட்சியவாதியின் வாழ்க்கையையும் ஆதாரமாகக் கொண்டு, 'ஆத்மாவின் ராகங்கள் என்ற சிறந்த நாவலை நா. பா எழுதினார். லில் அது வாசகர் வட்டம் வெளியீடு ஆக பிரசுரம் பெற்றது. பின்னர் தீபத்தில் தொடர்கதையாகவும் வெளியிடப்பட்டது. iல் புத்தகமாகப் பிரசுரம் பெற்று, எழுதியவர்களுக் கும் நாவல் இலக்கியத்துக்கும் பெருமை சேர்த்த நல்ல படைப்புகள் பல தீபத்தில் தொடர் கதைகளாக வெளிவந்தவையாகும். அசோக மித்திரனின் கரைந்த நிழல்கள், ஆதவன் எழுதிய காகித மலர்கள், இந்திரா பார்த்தசாரதியின் தந்திர பூமி, நாஞ்சில் நாடனின் 'மாமிசப் படைப்பு, நீல. பத்மநாபன் எழுதிய தீ-தீ ஆகியவை இத்தன்மை ళ , - ஆர். சூடாமணி நாவல் தீயினில் தூசு', தி. சா. ராஜூ வின் 'காளியின் கருணை, இசைக்க மறந்த பாடல் விட்டல் ராவின் வெப்பக் காற்று', தேவகோட்டை வா. மூர்த்தியின் பிழைகள், ஜொலிக்கும் வைரங்கள்', 'புளிக்கும் திராட்சைகள், மலர் மன்னன் எழுதிய மலையிலிருந்து வந்தவன், உஷா மணியன் எழுதிய திருப்பு முனை ஆகியனவும் தீபத்தில் தொடராக வெளி வந்த நாவல்கள் ஆகும். - புதிதாக எழுத அரம்பித்திருந்தமோகனன் என்ற எழுத்தாளரின் 'அக்கினிக்குஞ்சு' எனும் நாவலையும் 'தீபம் தொடர்கதையாக வெளியிட்டது. இவை தவிர, குஜராத்தி, வங்க, மலையாள மொழி நாவல்களின் தமிழாக்கம்கள் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டன. அனந்த கோபால் செவடே எழுதிய இருளின் கீதம் (தமிழில் - செளந்தரா), சிவகுமார் ஜோஷியின் 'பொன்னிழல்' (சு.கிருஷ்ணமூர்த்தி மொழிபெயர்த் தது), பாரப்புரத்து நாவல் துண்டில் புழு (தமிழ் ஆசி), மலையாற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_யுகம்.pdf/59&oldid=923254" இலிருந்து மீள்விக்கப்பட்டது