பக்கம்:தீபம் யுகம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 73 தொழில் அவரால் மொத்தத்தில் நஷ்டப்பட்டு விட்டது என்பது உட் பொருளாயிருக்கலாமல்லவா? நீங்கள் ஒரு பிரமுகராக வேண்டுமானால் முதலில் மற்றவரை சாதாரணமானவர்களாக்கிவிட்டு முன்னால் வந்து நில்லுங்கள். மற்ற வர்களைப் பிரமுகர்களாக்க வேண்டுமானால் நீங்கள் பின்னால் சாதா ரணமானவர்களாக ஒதுங்கி நின்று கொண்டு மற்றவர்களுக்குத் தாரா ளமாக வழி விட்டு விடுங்கள். பிரமுகராவதின் இரகசியம் முன்னால் ஓடுவதிலும் - பின்னால் ஒதுங்கி நிற்பதிலும் தான் இருக்கிறது. கங்கை - அது இங்கு வெறும் நீர்ப் பிரவாகமாக மட்டும் ஒட வில்லை. இந்த நாட்டு வாழ்க்கையின் பல்லாயிரங்காலத்துச் சாராம்ச மாகவே அது பெருகிவருகிறது என்று சொல்லலாம். இப்படி அதை நினைப்பது தான் எத்தனை கம்பீரம்ான நினைவாகயிருக்கிறது! 景 骨 婚 鲁 'மறைவாக நமக்குள்ளே என்றொரு பகுதி, நசிகேதன், க. நா. சுப்ரமணியம் எழுதி வந்தனர். கலை இலக்கிய உலக மாரீசங்கள் - 'சோ' எழுதிய மனம் ஒரு குரங்கு என்ற நாடகம் பெர்னாட்ஷா வின் பிக் மாலியன் நாடகத்தின் மாரீசமாகும் போன்ற தகவல்கள் - எழுத்து உலகத்தில் நிலவுகிற பெருமை சிறுமைகள், பல்கலைகழ கங்களின் மெத்தனப் போக்கு போன்ற பலப்பல விஷயங்கள் இப்பகு தியில் அலசப்பட்டன. இப்பகுதிகள் தொடர்ந்து நீண்டகாலம் வரவில்லை. இரத்தினச் சுருக்கம் இதர அம்சங்களைப் பார்க்கிலும் அதிக காலம் வந்துள்ளது. 姆 键 警 曼 இலக்கிய மேடை என்ற பகுதியில் வாசகர்களின் கேள்விக ளுக்கு நா. பா. பதில் அளித்தார். அவருடைய நகைச்சுவை உணர்வு, அங்கதம், சூடாகப் பதில் கொடுத்தல், சிந்தனைத் திறம், புலமை முதலிய பண்புகள் இப்பகுதியில் பளிச்சிட்டன. இறுதிக்காலம் வரை இந்தப் பகுதி தொடர்ந்தது. நா. பா. வின் கூரிய பதில்களுக்குச் சான்றாக சில - கேள்வி சகல திசைகளிலும் இன்று நாட்டில் தென்படும் உணர்வு என்ன? பதில் : சுயநலம். எந்தச்சிறிய அல்லது பெரிய காரியத்திலும் சுய நலம் பார்த்தே செயல்படும் உணர்வு வளர்ந்திருக்கிறது. தனக்கு லாபமில்லாத நல்ல காரியத்தையோ கெட்ட காரி யத்தையோ யாரும் செய்வதேயில்லை. பொது நலம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_யுகம்.pdf/74&oldid=923271" இலிருந்து மீள்விக்கப்பட்டது