பக்கம்:தீபம் யுகம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 தீபம் யுகம் 9. இலக்கியச் சந்திப்புகள் தீபம் இதழுக்குப் பெருமைச் சேர்த்த சிறப்பு அம்சங்களில் இலக்கியச் சந்திப்புகள் என்பதும் ஒன்று ஆகும். பெயர் பெற்ற எழுத்தாளர்கள், இலக்கியவாதிகளைப் பேட்டி கண்டு, அவர்களுடைய கருத்துக்களை சேகரித்து, இதழ் தோறும் வெளியிட்டு வந்தது தீபம், முதன் முதலாக, கலைமகள் ஆசிரியர் கி. வா. ஜ. சந்திப்பை விவரித்திருந்தார் தபஸ்வி. அடுத்து, கிருஷ்ணமணி லா. ச. ராமாமிர்தத்தை சந்தித்து எழுதி னார். தொடர்ந்து அவர் அநேக இலக்கியவாதிகளை பேட்டி கண் டார். நாரணதுரைக்கண்ணன், ந. சிதம்பரசுப்பிரமணியன், வெ. சாமி நாத சர்மா, தி. ஜ. ஏ. பி. எஸ். ராமையா, பெரியசாமி, தூரன், க. நா. சுப்பிரமணியம், தி. ஜானகிராமன், கு. அழகிரிசாமி, ஜெயகாந் தன் ஆகியோரையும் கிருஷ்ணமணி சந்தித்து எழுதியுள்ளார். மணிக்கொடி ரீநிவாசனை தி.க.சி. சந்தித்து, அவருடைய அபிப்பிராயங்களைக் கேட்டு எழுதினார். டி. எஸ். சொக்கலிங்கம், நா. வானமாமலை, தொ. மு. சி. ரகுநாதன் சந்திப்புகளும் வெளியி டப்பட்டன. பேட்டி கண்டவர் தி. க. சி. தெ. பொ. மீனாட்சி சுந்தரனாரை மணி சாஸ்திரி (கிருஷ்ண மணி) பேட்டி கண்டிருக்கிறார். ஜி. சங்கரகுரூப் என்ற கேரளக் கவிஞ ரையும் அவர் சந்தித்து கருத்து சேகரித்துள்ளார். அ. சீனிவாச ராகவன், கு. அருணாசலக் கவுண்டர் சந்திப்புக ளையும் தீபம் வெளியிட்டுள்ளது. இவர்களை நெல்லை ஆ. கணபதி பேட்டி கண்டிருக்கிறார். அசோகமித்திரன், கி. சந்திரசேகரன் அ.ச. ஞானசம்ப ந்தன் இரு வரையும் சந்தித்து எழுதியுள்ளார். மெளனி, சி.சு. செல்லப்பாவை கி. அ. சச்சிதானந்தன் பேட்டி கண்டார். சிங்கப்பூரில் தமிழ் முரசு நாளிதழ் நடத்திய தமிழவேள் கோ. சாரங்கபாணி, இலங்கை தனிநாயகஅடிகள், அ. கைலாசபதி, வங்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_யுகம்.pdf/77&oldid=923274" இலிருந்து மீள்விக்கப்பட்டது