பக்கம்:தீபம் யுகம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 தீபம் யுகம் பிளேபாய் எனும் உலகப்புகழ் பெற்ற ஆங்கில சஞ்சிகையில் வந்த அயன்ராண்ட் பேட்டியை தமிழாக்கி வெளியிட்டது தீபம். லெபனான் கவிஞர் பாசி அட்லியை குவெய்த் வாசு பேட்டி கண்டு எழுதியுள்ளார். பிரெஞ்சு எழுத்தாளர் சாத்தேயை தீபக் சர்மா பேட்டிகண்டுஇந்தியில் எழுதியதை செளரி தமிழாக்கி, தீபம் பிரசுரித் திது. இப்படியாக இலக்கிய உலகப் பிரச்சினைகள், இலக்கியம் பற் றிய பல்வேறு கருத்துக்கள், பிரபல படைப்பாளிகள் - இலக்கியவாதி களின் தனிப்பட்ட அபிப்பிராயங்கள், ஆலோசனைகள் முதலிய வற்றை தமிழ் இலக்கிய ரசிகர்கள் தெரிந்து கொள்வதற்கு தீபம் பெரிதும் உதவியிருக்கிறது. இலக்கியச்சந்திப்பு மூலம் தங்கள் அனுபவங்களையும் அபிப்பி ாயங்களையும் வெளிப்படுத்த வாய்ப்பில்லாது போன முக்கிய リ எழுத்தாளர்களை நானும் என் எழுத்தும் என்ற தலைப்பில் எழுதும் படி நா. பா கேட்டுக் கொண்டார். கந்தர ராமசாமி, நகுலன், கி. ராஜநாராயணன், வல்லிக்கண் ணன், ஹெப்சிபா ஜேசுதாசன், தி.சா. ராஜூ, செ. கணேசலிங்கன், ஆர். வி. மகரிஷி, சரோஜா ராமமூர்த்தி, பி. வி. ஆர். ர. சுநல்லபெரு மாள், ஆதவன், வாசவன், கர்ணன், அசோகமித்திரன், சார்வாகன், நீல. பத்மநாபன், ஆகியோர் அவரவர் எண்ணங்களை, அவரவரு டைய நோக்கிலும் போக்கிலும் எழுதியுள்ளனர். நா. பார்த்தசாரதியும் இத்தலைப்பில் எழுதியிருக்கிறார். ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்த அருமையான கட்டுரை ஆகும். சரஸ்வதி யில் வந்த நான் சென்னைக்கு வந்தேன் கட்டுரை கள் போலவும், எழுத்து பிரசுரித்த 'ஏன் எழுதுகிறேன் கட்டுரைகள் போலவும், இவை குடும் சுவையும் இலக்கியத் தகவலும் நிறையப் பெற்ற கட்டுரைகள் ஆகும். இவை தொகுக்கப்பட்டு தனி நூலாகப் பின்னர் வெளிவந்துள்ளன. (எழுத்து வில் வந்த 'ஏன் எழுதுகி றேன்? கட்டுரைகள் மட்டும் எழுத்து பிரசுரம் ஆக புத்தக வடிவம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_யுகம்.pdf/79&oldid=923276" இலிருந்து மீள்விக்கப்பட்டது