பக்கம்:தீபம் (இதழ்).pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I? புதிய புத்தகங்கள் திருக்குறட் சுடர் . (கட்டுரைத் தொகுதி) ஆசிரியர்: மூதறி ஞர் டாக்டர் வ. சுப மாணிக்கம், டி.லிட். வெளியீடு: மணிவாசகர் பதிப்பகம், சிதம்பரம். கிடைக்குமிடம்: மணிவாசகர் நூலகம், 14, சுங்குராம் தெரு, பாரி முனே, சென்னை-600001, பக்கங்கள்: 160:12. விலை: @· 12-50. மூதறிஞர் டாக்டர் வ. சுப. பாணிக்கம் அவர்கள் கடந்த நாற்பது ஆண்டுகளாக எழுதிய கட்டுரைகள் அனைத்தையும் வகைப் படுத்தி, ஓரினப் பொருளை ஒரு தலைப்பின் கீழ் நூலாக்கும் திட்டத்தில் வெளிவரும் பல நூல் களில் இதுவும் ஒன்று. 1330 குறட்பாக்கள் இரண்ட்டி என்ருல் - 660 வரிகள் கொண்ட திருக்குறள் பற்றியும் விளக்கமாகவும் வெளி வந்துள்ள நூல்கள் 2000ஐ எட்டியிருக்கும். எனினும் திருக்குறளின் புதுமையும் பொலிவும் இன்றும் குறையவில்ல்ை. இந்நூலாசிரியர் புலமைத் தமிழில் ஒரு தனி நடையில் திருக் குறள் வெளிப்படை, நடைமுறை அறங்கள், குறளணிகள், திருக்குறள் உத்திகள், வள்ளு வர் கண் ட கல்வித் திட்டம், வள்ளுவர் கண்ட உலகப் போக்கு, திருக்குறளும் தம்ம பதமும், நிகழ்காலப் பார்வை என்ற பல் வேறு கண்ணுேட்டங்களில் குறளை ஆராய் கிருர், தமிழ் மக்கள் திருக்குறளை உரைகளினின் றும் விடுதலைப்படுத்தி மூலக் குறள்களே நேரே தீண்டுவார்களாக! என்று கட்டளை விடுக் கிருர், - நடைமுறை அறங்கள் என்ற தலப்பி லும் நிகழ்காலப் பார்வை என்ற தலைப்பிலும் நூலாசிரியர் திருக்குறளின் காலமொன் றின்மை என்ற விரிவினை நெஞ்சில் ஊடுருவு. வது போன்று விளக்கும் அழகு சிந்தனையில் ஆழ்ந்து தங்குகிறது. திருத்குறள் தேசிய மின்றயாகும் தனிப் பேறு பெற்றுள்ளது என் பதை நமது இந்திய அரசியல் சட்டத்தின் பகுதிகள்ை ஒப்புமைப்படுத்தி நிலைநாட்டும் ப்ோது நாம் மெய்ம்மறந்து அதை ஏற்கி, ருேம். நூலின் இறுதி தேசிய உணர்வோடு நாட்டுப் பற்றை வலியுறுத்தி முடியும்போது பி.எச்.டி. að)&Fö 1 f7 áðT நம் நெஞ்சுவிம்முகிறது. ஆசிரியரை வாழ்த்து கிறது. -திருமூல பாண்டியன் மதினிமார்கள் கதை (சிறு க ைத த் தொகு தி) ஆசிரியர்: கோணங்கி. வெளியீடு: அன்னம் பிரைவேட் லிமிடெட், 2, சிவன்கோவில் தெற்குத் தெரு, சிவகங்கை-623 560. பக்கங்கள்: 100. விலை: ரூ. 8-00. - வித்தியாசமான நூல்களை வித்தியாச மான முறையில் வெளியிடுவதில் ஒரு விமரி இடம் பெற்றுவிட்ட அன்னம் வெளியீடு இது. இம்முறை கரிசல் மணம் பக்கத்துக்குப் பக்கம் கும்மென்று மணந்து கொண்டு ஒரு சிறுகதைத் தொகுதி. அட்டை, அச்சு, அமைப்பு எல்லாம் நேர்த்தி என்று வழ வழா கொழகொழா விமர்சகன் மாதிரியே நம்மையும் வாயெடுக்க வைக்கிற மாதிரி நினை வில் ஒரு ஜலதரங்கம் வாசிக்கும் அற்புதமான அட்ட்ை வண்ண ஜாலம் இல்லை. எனினும் அைது செய்கிற ஜாலம்! .ே க | ண ங் கி கரிசல் தோண்டி கண் டெடுத்த வைரம். நினைவோவியம் தீ ட்டு வதில் அவர் நிபுணத்வம் பக்கங்கள் இருக்கிற ஒரு குறுக்கத்திலும் எத்தனை வகை தானியங் களுக்கு இடம் வைக்க முடியும்' என்று நிரு பணமாகியிருக்கிறது. - பதிைேரு சிறு க தைகள் ம ட் டு மே கொண்ட இந்தத் தொகுதியில் முன்னுாைப் பக்கங்களை ஆபரேஷன் மேஜையாக்கியதோடு விடாமல் ஒரு சர்ஜரி லெக்சர் ஹால் ஆக்கி ஒவ்வொரு கதையையும் அறுத்துத் தள்ளி தம் சமத்காரத்தை நிரூபிக்கிற சாக்கில் கி. ராஜ நாராயணன், பூமணி, பா. ஜெயப்பிரகாசம், வீர. வேலுச்சாமி, ச. தமிழ்ச்செல்வன் என்று ஒரு கரிசல் கூடாரத்தையே காதை முறுக்கும். வர்த்தியார்த்தனத்திற்கு ஒதுக்கியிருக்கிருர் சா. ஜோதிவிநாயகம். தோணங்கி அப்படி அறிமுகப்படுத்தப் பட வேண்டிய கோட்டா பேர்வழியல்ல என்று தம் ஒவ்வொரு கதையிலும் நிருபித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_(இதழ்).pdf/20&oldid=923161" இலிருந்து மீள்விக்கப்பட்டது