பக்கம்:தீபம் (இதழ்).pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

游梦 வளர்ச்சியும், பாரதிக்குப் பின் தமிழ் உரை நடை, தமிழில் சிறுப்த்திரிகைகள் ஆகிய வற்றை எழுதி முடிப்பதற்கும் நா.பா.வின் உற்சாகமூட்டும் ஆதரவும், தீபம்’ அளித்த சுதந்திரமுமே அடிப்படைகளாக அமைந்' திருந்தன. சி. சு. செல்லப்பாவின் எழுத்து அனுபவங்கள்', 'விமர்சனத் தேடல்" ஆகிய ஆழமும் கனமும் நி ைற ந் த கட்டுரைத் தொடர்கள் தீபம்' இதழில் வெளிவருவதற் கும் நா.பா. அவர்களின் அன்பும் ஊக்கமுமே காரணமாகும். அதே போல, நா.பா. இலக்கியவாதி கள்ே கவுரவித்து, அவர் க ளுக்கு உரி 1 கவனிப்பு கிடைக்கும் விதத்தில் தகுந்த முறை யில் செயலாற்றியதற்கு சாகித்திய அகாடமிப் பரிசுகள் படைப்பாளிகளுக்குத் தொடர்ந்து கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டதைக் குறிப்பிட வேண்டும். கு. அழகிரிசாமி, வல்லிக்கண் ணன், தி. ஜானகிராமன், பி.எஸ். ராமையா, கநா.சுப்ரம்.ண்யம்ஆகிய இலக்கியவாதிகளுக்கு அப்பரிசுகள் கிடைப்பதற்கு நா.பா.வின் இலக்கிய ஆர்வமும், அன்பும திறமையாளர். கலை உரிய முறையில் கவுரவிக்க வேண்டும் என்கிற அந்தரங்க உணர்வுமே ஆதார சக்தி யாக அமைந்திருந்ததை இலக்கிய நண்பர்கள் அறிவர். : எ ழு த் த | ள ன், நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை முதலியவற்றை எழுதுவ து ட ன் - அ ப் ப டி. எ ழுது வ த ல் கிடைக்கிற பெயருடனும் புகழோடும்ஒதுங்கி இருந்துவிடக்கூடாது என்ற கருத்து உடையவர் நா.பா. - எனவே, அவர் சமுதாயப் பொறுப் புடன், செயல்களிலும் ஈடுபட்டார். அரசிய வில் அக்கறை காட்டினர். அரசியல் கட்சி களின் கோளாருண் போக்கு களை, அரசியல் வாதிகளின் குறைபாடுகளை, சமூகச் சீர்கேடு களை எல்லாம் எழுத்தில் அம்பலப்படுத்திய டன், மேடைகளிலும் உணர்ச்சி வேகத் தாடு சுட்டிக்காட்டி சொற்பொழிவுகள் நிகழ்த்தினர். இதற்காத, தனது_ஆரோக் கியத்தைப் பற்றிக் கவலைப்படாமலே, ஊர் ஊர்ாகச் சுற்றினர். தற்கால இலக்கியம் தனக்கு உரிய இடத் தைப் பெற வேண்டும் என ಔಘೀ அலும், அதற்குத் தன்குல் இயன்ற அளவு உழைப்பதிலும் நா.பா. இறுதிவரை ஆர்வம காட்டி வந்தார். - சாகித்திய அகாடமி பிரசுரித்து வருகிற 'இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் இன்றைய இலக்கியம் உரிய இடத்தைப் பெறு வதில் நா.பா. காட்டிய ஈடுபாடும் பாங்குடி பெரியதாகும். புதுமைப்பித்தன் பற்றிய புத் தகம் வருவதற்கும், கு. ப. ராஜகோபாலன் பற்றிய புத்தக்ம் எழுதப்படுவதிலும் அவர் தீவிர அக்கறை கொண்டிருந்தார். 1987 நவம்பரில் சாகித்திய அகாடமி புது டில்லியில், அகில இந்திய நோ க் கி ல், 'பு துமை ப் பித் தன் நினைவுக் கருத்தரங்கு' நடத்தியது. இப்படி ஒரு கருத்தரங்கு ஏற் பாடு செய்ய வேண்டும்' என்று க.நா. சு. யேர்சனை கூறியதும், அது செயல் மலர்ச்சி பெறுவதற்கு நா.பா. பூரண ஒத்துழைப்பு தந்து பணிபுரிந்தது முக்கியமாகும். இவ்வாறு பல வழிகளிலும் இலக்கிய சேவை புரிந்துகொண்டிருந்த நா. பா. அவர் களுக்கு மேலும் பெருமையும் புகழும் சேர்க் கூடிய வாய்ப்புகள் காத்திருந்தன. அவர் முழு மனத்துடன் ஈடுபட்டு, சிறப்பாகச் செய்து முடித்திருந்த ஆய்வுக்கான டாக்டர்’ பட்டம் கிடைக்கும் வேளை வந்திருந்தது. இதர பெரும் கெளரவங்களும் அவரை வந்து அடைந்திருக்கும். § - - அதற்கெல்லாம் தகுதியானவர்தான் நா.பா. கடும் உழைப்பிலுைம், தளராத தன்னம்பிக்கையோடும், அளவிலா உற்சாகத் தோடும் ஊக்கத்தோடும் அவற்றுக்கெல்லாம் தன்னை தகுதிப்படுத்திக்கொண்ட மாமனிதர் அவர். - - - . நா.பா. உழைப்பின் உற்சாகத்தின், நம் பிக்கையின், பன்முகத் திறமைகளின் வடிவ மாக விளங்கினர். அன்பும், நட்பும், நற் பண்புகளும் குடிகொண்டிருந்த நல்ல மனிதர் அவர். நா.ப்ா. எனக்கு நண்பர் மட்டுமல்ல; எனது வாழ்வின் நலத்திலும் வளத்திலும் அக்கறைகொண்டிருந்த அன்புச் சகோதரரும் -ஆவார். - • *. ..., * ... . . . அவருடைய மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழ்ப்ப் தான். —r Edited asarablished by s. Thirumalai at S.Nallathambichetty street, Madras-2. . . . . . . . . . and Printed by him at Deepam Achagam, Madras-600002 Founder Editor, Naa. Parthasarathy M.A.B.Lit,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_(இதழ்).pdf/35&oldid=923177" இலிருந்து மீள்விக்கப்பட்டது