பக்கம்:தீபாவளி வரிசை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

10

10 -அதிலே நாலு வாங்கிவரலாமா இண்ணு உங்களெ கேட்டுட்டு-போவ வந்தேன்.

ச. வேண்டவே வேண்டாம்!-முருகா! நீ மனமிரங்கினாய்! என்று பார்த்தேனே! இன்னும் இந்த சோதனையா ? -சீ எனக்கின்று கதர் தொவத்திகள் கொடுத்தால் அந்த ஏழைகளுக்கு கொடுக்கிறேன் இல்லாவிட்டால் இப்படியே பட்டினி கிடக்கிறேன்.-- (முருகேசம், அ றைக்குள் நாடி வருகிறான்)

மு. நாயினா நாயினா ! என்கண்ணு கண்ணுகுட்டி ! வந்தூட்டுது வந்தூட்டுது. .

சோ. என்ன பயித்தியக்காரா ! நான பைத்தியக்காரெ! நீதான் அதோ பாரு அந்த எடையன் வாசல்லெ கொண்டாந்திருக்கான் !

(கன்று குட்டி கத்தும் சப்தம் கேட்கிறது)

ச. என்ன இது ?-சோமு-அந்த இடையனை இப்படி கூப்பிடு. சோமு முருகேசனுடன் வெளியே போகி றான்) என்ன விந்தையாயிருக்கிறது!

சோமு, முருகேசன், இடையன், வருகிறார்கள்.

ச. ஏனப்பா, கன்றுக்குட்டியைக் கொண்டுவந்து விட்டா யாமே ?-வேண்டாமா என்ன?

இ.இல்லீங்க எசமா '-கொஞ்ச நாழிக்கு மின்னே, யாரோ ஒரு பெரிய மனுஷரு, ரெண்டு மோடா வண்டி யிலே வந்தாரு-வந்து-இந்த கண்ணு குட்டியெ, வித்தூடராயாப்பா இண்ணு கேட்டாரு-நல்லவெலே வந்தா வித்துடரேண்ணே -என்ன வெலேண்ணு கேட்டாரு-நானு பத்து ரூபாவுண்னு சொன்னேன் உடனே பத்து ரூபா எடுத்து கொடுத்து விட்டாரு .கொடுத்துட்டு-என்ன சொன்னாருண்ணா-இந்தா ஒனக்கு மேலே அரெருபாதர்ரேன்-இத்தெகொண்டு போயி, கடைசி ஊட்டிலே, சண்முகமுதலியாரிருக்க ராரே அவர் கடைசி புள்ளெ. முருகேசன், இருக்கான்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபாவளி_வரிசை.pdf/14&oldid=1415902" இலிருந்து மீள்விக்கப்பட்டது