15
-தங்கவேலு-அந்த ஓலை பாணத்தை இரண்டா வது கார் பெட்டியில் வைத்திருக்கிறது, கால்பட்டு மிதி படாமலிருக்கும்படி-அதைக் கொண்டுவா சீக்கிரம்.
(தங்கவேலு பிள்ளை வெளியே போகிறான்)
மு. நாயினா நம்பொ கோயில்லெ இருக்கிற சாமி-நல்ல சாமி நாயினா காலமெ போயி நானு இதல்லாம் ஓணும் இண்ணு கேட்டேன் ? அப்படியே கொடுத் தாரு-சாயங்காலம் போயி அவரெ கும்பிடரென்.
ச. அப்படியே செய்யப்பா ! ஆயினும் இப்பொழுது உங்கள் மாமாவைக் கும்பிடு. உனக்கு இதெல்லாம் கொண்டுவந்து கொடுத்தாரே. ஆமாமாம் (திருமெஞ்ஞான முதலியாரைக் கும்பிடு கிறான்; அவர் அவளைக் கட்டியணைத்து முத்தமிடுகிறார் ; தங்கவேலு பிள்ளை ஒரு கையால் கூ டையில் ஓலெ பாணத்தையும், மற்றொரு கையால் தேன்குழல் அச் சையும் கொண்டுவந்து வைக்கிறார்).
ச. தேன்குழல் அச்சு கூடவா வரிசை ?
ஆமாம்-எனக்கு தேன்குழல் ரொம்ப இஷ்டம் என்று உனக்கு தெரியுமே. நாளை காலை நான் அதில்லாமல் தீபாவளி எப்படி கொண்டாடுவது ?- ஓ! அ தை சொல்ல மறந்தேன். நான் இந்த வருஷம் தீபாவளி
வரிசையை உங்கள் வீட்டில் தான் கொண்டாடப் போகி
றேன்.
ச-ப. மிகவும் சந்தோஷம்.
ப. ஆனால், உங்க குழந்தை-அங்கே தனியாகவா இருப் பான் ?
தி. குழந்தையா ! அவனுக்கு பத்தொன்பது வயதாகிறது. அவன் பி.ஏ., பஸ்ட்கிளாசில் பாஸ் பண்ணிவிட்டு, எம். ஏ. பரீட்சைக்கு படிக்கிறான். (விஜயலட்சுமி மெல்ல வெளியே போகிறாள்). அவன் இந்த வருஷம் தான் ஹாஸ்டல் (Hostel) சிநேகிதர்களுடன் தீபாவளி கொண்டாட வேண்டுமென்று, ஹாஸ்டலில் இருக் கிறான்.