பக்கம்:தீபாவளி வரிசை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

21

 விஜயலட்சுமி ஒரு தாம்பாளத்தில் தேன்குழலை எடுத்துக்கொண்டு வருகிறாள்.

ச. யார் அது ?

ப. அந்த சரிகைப் புடவையின் டாலிலே உங்களுக்கு கண் கூசுகிறாற்போ லிருக்கிறது -விஜயலட்சுமி ! உங்க நாயினாவே சேவிச்சிக்கோ அம்மா! (விஜயலட்சுமி சேவித்துக் கொள்கிறாள்)

சீக்கிரம் கலியாணமாக வேண்டும் என்று ஆசீர்வாதம் பண்ணுங்கள்-அத்தான்.


ச. அது முருகன் திருவுளம்!

தி.பாருங்களேன் அப்படியே நடக்கப் போகிறது-அவர் கருணையினாலே. -

(முருகேசன் உள்ளே வருகிறான்)

மு. நாயினா நம்ப பண்ணையாளுங்க வந்திருக்காங்க.

ச. ஆ | இந்த சந்தோஷத்தில் அவர்களை மறந்தேன்.

தி. அத்தான், நீங்கள் கவலைப் படாதீர்கள்! அவர்களுக் கெல்லாம் கொடுக்க மட்ட தினுசில் நான்கு கதர் வேஷ்டிகள் வாங்கிக்கொண்டு வந்திருக்கிறேன்.

ச. முருகா! முருகா! உன் கருணையை என்னென்று புகழ்வேன்!

தி . சோமு, அந்த மூட்டையைக் கொண்டுவா அப்பா இப்படி.

ச. வேண்டாம், மெஞ்ஞானம், அவைகளை நீயே கொடுத்து விடு-பண்ணையாட்களுக்கு-உன் கையாலேயே.

தி. நீங்கள் கொடுக்கச் சொன்னீர்கள் என்று சொல்லிக் கொடுக்கிறேன்.

ச. அப்படியே செய் அப்பா (திருமெஞ்ஞான முதலியா ரும் சோமுவும் வெளியே போகின்றனர்).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபாவளி_வரிசை.pdf/25&oldid=1416061" இலிருந்து மீள்விக்கப்பட்டது