22
ப. அது பெரிய மூட்டையா யிருக்குது. அதுலெ நம்ப பண்ணெக்காரு பெண்சாதிங்க கட்டிக்கிற பொடவெங் களெ கொண்டுவந்திருக்கிறாற் போலிருக்கிறது.
ச. உனக்கெப்படி தெரியும் ? நீ பிரித்துப் பார்த்தாயா என்ன ?
ப. உம்! நான் பிரிப்பேனா-மூட்டைமுடிச்சு அவுந்திருந் தது-அதுலே தெரிஞ்சுது.
(வெளியில் பண்ணைக்காரரின் பெருங்கூச்சல் பாலு வெளியே போகிறான்)
ச. என்ன கூச்சல் அது ?
(பாலு வருகிறான்)
பா. பண்ணெக்காருங்கல்லா, தோவத்தியோடெ கூட பொடவைங்களும் கெடைச்சிதெ இண்ணு, சந்தோஷத்துலெ கூச்சல் போடராங்க.
ச. அப்பா முருகையா !
(திருமெஞ்ஞான முதலியார் திரும்பி வருகிறார்)
ச. மெஞ்ஞானம், நீ தீபாவளி வரிசையாக கொண்டுவந்த பொருள்களில், எனக்கு மிகவும் சந்தோஷத்தைத் தந்தது-நீ இப்பொழுது அந்த பண்ணையாட்களுக் குக் கொடுத்த துணிகளே - அப்பா - இன்றைத் தினத்தை நான் மிகவும் மனவருத்தத்துடன் கழிக்கப் போகிறேன் என்று எண்ணிக் கொண்டிருந்ததற்கு முருகன் கருணையினால், என்னை மிகவும் சந்தோஷ மாகக் கழிக்கச் செய்தாய் ! உனக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன். அப்பா ?
தி. உங்களைவிட நான் அதிக சந்தோஷப் படும்படியாக நீங்கள் எனக்கு செய்யக்கூடிய கைம்மாறு ஒன்றிருக் கிறது ? .
ச. சொல் அதை-இப்பொழுதே செய்கிறேன் - நான் எந்த ஸ்திதியிலிருக்கிறேன் என்று உனக்கு தெரியும்.