பக்கம்:தீபாவளி வரிசை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

23

 தி. அதை யெல்லாம் பற்றி நீங்கள் இனி யோசிக்க வேண்டாம் - நீங்கள் கொடுக்கக்கூடியதைத் தான் கேட்கப்போகிறேன். நீங்கள் கொடுப்பதாக வாக்கு கொடுங்கள்.

ச. நான் கொடுக்கக் கூடிய எதையும் கொடுக்கத் தடை யில்லை. அப்பா.

தி. ஆனால்,-(சுத்திப் பார்த்து) உங்கள் பெண்ணை-என் பிள்ளைக்கு கன்யாதானமாகக் கொடுங்கள் (விஜய லட்சுமி சரேலென்று தலைகுனிந் தவண்ணம் வெளியே போகிறாள்.)

மு. அக்கா, எங்கே போகறெ ?

ப. அடெ முருகேசம் கொஞ்சம் பேசாமலிரு.

ச. முருகா! முருகா! என்னை சந்தோஷசாகரத்தில் மூழ்த் தாதே! அப்பா மெஞ்ஞானம்-உன் இஷ்டப்படியே அப்பா.

ப. ஓகோ! பெற்றவள் நானிருக்கரேன்-நீங்க ரெண்டு பேரும் தீர்மானம் பண்ணிக்ரைங்களெ -

தி. இதென்ன !தங்கச்சி-உன் சம்மதி யில்லாமலா ?-தானம்செய்வ தென்றால், புருஷனும் பெண்சாதியும் மனமு வந்து செய்வதுதான் தானம். உன் இஷ்டத்தையும் சொல்.


ப. நான் என்ன சொல்வது ? பழம் நழுவிப் பாலில் வீழ்ந் ததாம் அதினின்றும் நழுவி வாயில் வீழ்ந்தால் நான் எ ன் ன சொல்வது ? அப்படியே செய்யுங்கள் அத்தான்.

ச. ஆமாம், உன்னுடைய அபிப்பிராயத்தையும் தெரிந்து கொண்டுதானே, உன்னை நான் கலியாணம் செய்து கொண்டேன்-அதே மாதிரி விஜயலட்சுமி அபிப் பிராயத்தையும் நாம் கேட்க வேண்டாமா ?

ப. அவள் அபிப்பிராயத்தெ நம்பொ கேட்கவேண்டி யதெ இல்லெ. அத்தான், நமக்கு இது கிட்டாது இண்ணு நெனச்சி இதுவரைக்கும் ஒரு ரகசியத்தெ உங்களிடம் சொல்லலெ நானு, கொஞ்ச நாளைக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபாவளி_வரிசை.pdf/27&oldid=1416063" இலிருந்து மீள்விக்கப்பட்டது