பக்கம்:தீபாவளி வரிசை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

24

24 முன்னெ, தமிழ்நாடு என்ற பத்திரிகையில், பி.ஏ., பரிட்சையில் மொதலாக தேறிய ஒரு பிள்ளையாண் டான் படம் போட்டிருந்தது - அதைப் படித்துப் பார்த்து-இது யார் படமம்மா ? யாரோ திருமெஞ் ஞான முதலியார் பிள்ளை - கனகசபை முதலியார், இண்ணு போட்டிருக்குதே இண்ணு, எனக்கு காண் பிச்சி கேட்டாள். திருமெஞ்ஞானம் முதலியார் என்ற பேரைக் கேட்டவுடன், அது உன் பிள்ளையாயத்தா நிருக்க வேண்டுமென்று சந்தேகித்து, அதை வாங்கிப் படித்துப் பார்த்தேன். அதிலிருந்த விலாசத்தில் உன் பிள்ளைதான் என்று அறிந்து அதை அவளுக்கு உன் மாமா பிள்ளையம்மா என்று தெரிவித்தேன். அப்புறம் இந்த விஷயத்தை மறந்து விட்டேன். இரண்டு தினங்களுக்கு முன்னே காணாமற்போன என் சாவிக் கொத்தைத் தேடிப் பார்க்கும்போது அவள் பெட்டியில் அந்த படத்தை அவள் பத்திரப் படுத்திரு ப்பதைக் கண்டு - அவளை மெல்ல ரகசிய மாய்க் கேட்டேன். அப்போது அவள்-அம்மா! நான் கலியாணம் செய்து கொள்வதானால் இவரைத் தான் கலியாணம் செய்துகொள்வேன்-என்று தன் மனதிலிருக்கும் ரகசியத்தை தெரிவித்தாள். அம்மா! நாம் இருக்கும் ஸ்திதியில் இது நமக்குக் கிட்டாத பொருள் ஆச்சே மறந்துவிடு-என்று எவ்வளவோ சொல்லி பார்த்தேன். அவள் ஒரே பிடிவாதமாக, இல்லாவிட்டால் நான் கன்னிகையாகவே இருக்கப் போகிறேன்-என்று சத்தியம் செய்தாள். - இதை உங்களுக்குச் சொன்னால்-நீங்கள் மிகவும் கோபம் கொள்ளப் போரைங்க இண்ணு உங்களுக்குச் சொல் லாமலிருந்தேன்.


தி.அடடா ! என்ன ஆச்சரியம் இவர்கள் இரண்டு பெயரும் வைர்லெஸ்ஸ் டெலிகிராபிக் (Wireless Telegraph) கில் பேசிக்கொண்டார்களா என்ன ! என் கதையை நான் கொஞ்சம் சொல்கிறேன் கேளுங்கள்-எனக்கு எங்கள் தகப்பனார், எங்கள் வீட்லே உங்க அப்பா பி.ஏ பாஸ் செய்ததும், கலியாணம் செய்து வைத்ததது போல் கனகசபை, பி.ஏ., பாஸ் பண்ணினவுடன் அவனுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபாவளி_வரிசை.pdf/28&oldid=1416064" இலிருந்து மீள்விக்கப்பட்டது