பக்கம்:தீபாவளி வரிசை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

2


சாத்துப்பா-கொஞ்சம் திறந்திருந்தாலும் ரொம்ப குளிர்ந்த காற்று அடிக்கிறது, அந்தப் பக்கமிருந்து.

(சோமு எழுந்திருந்து அந்த ஜன்னலை சாற்றுகிறான். தெருக்கதவை தட்டுகிற சப்தம்.)

ப.சோமு, யாரோ கதவை தட்டுகிறார்கள் பாரப்பா.

(சோமு அறைக்கு வெளியே போகிறான் வெளியில் வானம் குமுறுகிறது, மின்னுகிறது ,மழை அதிகமாக ப்பலக்கிறது.) -

'

சோமு திரும்பி வருகிறான்

சோ. யாரோ வழிப்போக்கன் போலிருக்கிறது. மழை நிற்கிற வரையில் திண்ணையில் இருந்து போகலாமா என்று கேட்கிறார்-

ச. இருந்து போகச் சொல்லப்பா

ப. யார் பார்த்தாயா ? முன்பு ஒருவன் வந்தானே திரு டன்- அவனைப் போலிருக்கப் போகிறான்.

சோ. இல்லை அம்மா. யோக்கியனாகத் தானிருக்கிறது. சொக்கா யெல்லாம் போட்டுக் கொண்டிருக்கிறார். (போகிறான்)

ச. பர்வதம் ! நீ மற்ற விஷயங்களிலெல்லாம் புத்திசாலி தான், இதில் மாத்திரம் உனக்கு புத்தி கொஞ்சம் குறைவு. ஒருவன் திருடனாயிருந்தால், மற்றவர்களை யெல்லாம் திருடர்கள் என்று தூஷிக்கலாமா?

(சோமு திரும்பி வருகிறான்)

சோ. திண்ணையிலே படுத்துக் கொள்ளச் சொன்னேன்.

(தான் படுத்துக் கொள்கிறான்)

வி. நாயினா! அன்றைக்கி பேய்ஞ்சபோது திண்ணையெல் லாம் ஒழுகிச்சே! -யாரோ பாவம்!-இந்த மழை யிலேதான் நனையணும்.

ச. லட்சுமி சொல்வது வாஸ்தவம்தான். - சோமு,கொஞ்சம் எழுந்து போய், அந்த மனுஷனை-அவரை நடையிலெ படுத்துகலாம் என்று சொல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபாவளி_வரிசை.pdf/6&oldid=1415891" இலிருந்து மீள்விக்கப்பட்டது