பக்கம்:தீபாவளி வரிசை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

3

3 சோ. எத்தனை தரம் எழுந்திருக்கிறது (எழுந்திருக்கிறான்)

வி.சோமு, கோபிச்சிக்காதே அப்பா, மற்றவர்களுக்கு - யாரா இருந்தாலும் - நம்மாலான உதவி செய்ய வேண்டியது நமது கடமை


ப. சோமு, அப்புறம்-நடையிலே வாசல் பக்கம் கதவெ தாப்பாள் போட்டுடு. (சோமு போகிறான்).

ச.என்ன சந்தேகப் பிராணி !

ப. ஆமாம், எனக்கிருந்த ஒரு காசு மாலையும் களவு போச்சே-உங்களுக்கு என்ன ? அதிருந்தா இப்போ நமக்கு எவ்வளவு உபயோகமா யிருக்கும்?

வி. நாயினா-பாயி ஒண்ணு கொடுக்கட்டுமா, படுத்து கிறதுக்கு ?

ச. அப்படி சொல்லம்மா - பர்வதம், உன் பெண்ணுக் கிருக்கிற புத்தி உனக்கில்லையே!

ப. இவ ஒருத்தி - அந்த கிழிஞ்ச பாயிதான் ஒண்ணு இருக்குது - அத்தெ கொடு - நீ போகாதே-உன் தம்பி கிட்ட கொடுத்து கொடுக்கச் சொல்லு.

வி. அப்படியே அம்மா . (பர்வதம்மாள் கஞ்சி கொடுத்த பாத்திரத்தை எடுத்துக்கொண்டு வெளியே போகிறாள்) -

(நடையில் பாய் பரப்புகிற சப்தம் ; பிறகு நடைக் கதவு சாத்தப்படுகிற சப்தம் ; வெளியில் மழை கொஞ் சம் குறைகிறது).

ச. யார் அது ?-அழுகிற சப்தம் ?-பாலு, யார் அது ?

ப. முருகேசம்.


ச. ஏன் அழுகிறான் ? அவன் கண்ணுகுட்டி பூட்டுது இண்ணு அழரான் !

ச. அதற்காகவா? முருகேசம், நீ நல்ல புத்திசாலி யாச் சுதே!-வருத்தப்படாதே! நான் என்ன செய்வது ? நம்முடைய பண்ணையாட்களுக்கு தீபாவளிக்கு நாம் துணிமணி கொடுக்க வே ண் டு மே வழக்கப்படி --வேறொன்று மில்லையே யென்று உன் கன்றுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபாவளி_வரிசை.pdf/7&oldid=1415894" இலிருந்து மீள்விக்கப்பட்டது