பக்கம்:துங்கபத்திரை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

"என்ன பண்டிதரே! நீங்கள் கூறுவதைப் பார்த்தால் இன்னும் கொஞ்ச நானில் சோழன் தென்னாட்டையே கபளீகரம் செய்துவிடுவான் போல் இருக்கிறதே!"

"அடியேன் அபிப்பிராயமா இது? இல்லை, அவன் பலனின் தீர்ப்பு! இல்லாவிட்டால் பாண்டியநாட்டின் மீது ஆக்ரமிப்புச் செய்வானா?"

"உண்மைதான்! அப்படியானால் நாகமரையே அனுப்பி வைப்போம்"

"இதயம் குளிர்ந்தது எம்பெருமானே! நமது நாகமர் வடிவத்தில் அர்ச்சுனன், வைரநெஞ்சில் இராவணன்......!"

"சந்தேகமென்ன பண்டிதரே, இந்தப் பேரரசின் எல்லையை விரித்தது அவரது வாள்தானே! ஹரிஹரரும் புக்கரும் உடன் பிறந்தவர்களாக இருந்து சாம்ராஜ்யத்தை எழுப்பினார்கள்; நானும் நாகமரும் உடன் பிறக்கவில்லை. அவ்வளவுதான்!" என்று ராயர். கூறும்போது அவரது கண்களில் நடந்து முடிந்த போர்க்களமெல்லாம் முகம் காட்டி மறைந்தன. அகண்ட மார்பு வீங்கி வற்றியது. ஒரு கணம் கனவு கண்டவரைப் போல் இருந்த ராயர் துணுக்குற்று எழுந்தார்.

பாண்டியன் புன்முறுவல் பூத்தான். இழந்த மதுரை, ராயரின் பேருதவியால் மீண்டும் கிடைத்துவிடும் என்ற உறுதி பெற்றான். பாண்டியன் அந்த இடத்தை விட்டு விடைபெறும்போது ராயர் அவனுக்குக் கூறிய ஆறுதல் மொழிகள் அவனைச் சிகரத்திற்குத் தூக்கிப் போய்விட்டன.

நான்மாடக்கூடல் நகர்நோக்கி காகமநாயக்கர் புறப்பட்டுப் போன அன்றிரவு! கோட்டைக் காவலர்கள் நகரின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துங்கபத்திரை.pdf/20&oldid=1507347" இலிருந்து மீள்விக்கப்பட்டது