பக்கம்:துங்கபத்திரை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21

ஒவ்வொரு சுற்று வட்டத்தையும் பார்த்து விட்டு உள் வளைவுக்குள் நுழைந்தார்கள். "இவ்வளவு நேரம் நாகமர் விஜயநகர் எல்லை கடந்திருப்பார்; நாளை மாலைக்குள் காவிரிக்கரை சேர்ந்து விடுவார்" என்று அந்தச் காவலர்கள் பேசிக்கொண்டே சுற்றி வந்தார்கள். கிழக்கு வெளுப்பதற்குச் சில நாழிகைகளே மீதமிருக்கும். அப்போது அரசவையின் முகப்புக் காவலன் ருக்மாங்கதன் வேகமாக வந்தான். கோட்டைக் காவலர் கால்கடுக்க நடந்து அலுத்து பன்னீர் மரத்தடியில் உட்கார்ந்து கால் நாழிகை கூட ஆகவில்லை.

"என்ன ருக்மாங்கதா! என்ன விடியுமுன் வந்து விட்டாய்? உன் முறை தீர்ந்துவிட்டதா?" என்று கேட்டான் கோட்டைக் காவலர்களில் ஒருவன்.

இல்லை; இருவரும் என்னோடு வாருங்கள். பண்டித மணி ராஜா அய்யரை யாரோ கொலை செய்துவிட்டார்கள். விஜயநகரத்தில் இதுவரை நடைபெற்றிராத விபரீதம் இப்போது நிகழ்ந்து விட்டது. இந்தப் பழி, யார் தலையில் விழுகிறதோ தெரியவில்லை." என்று பேசிக்கொண்டே ருக்மாங்கதன் கோட்டைக் காவலர்களை அரண்மனைக்குள் அழைத்துச் சென்றான். அரசவை நடைபெறும் பளிங்கு மண்டபத்திற்குப் பக்கத்தில் ஒரு மூலையில் மூட்டை ஒன்று காணப்பட்டது. அழுக்குத் துணியால் கொண்ட அந்த மூட்டையில் பண்டிதமணி ராஜா அய்யரின் தலைப்பாகை பிரிந்து கிடந்தது. அவர் ஏட்டுச் சுவடிகளை அடுக்கி வைத்திருக்கும் வெள்ளிப்பெட்டி திறந்து கிடந்தது. எடுகள் எதுவும் உருப்படியாக இல்லை. அவர் அணிந்திருக்கும் தங்கக் காப்புக்களும் அங்கேயே வளைந்து நெளித்துக் காணப் பட்டன. அவருடைய பொன்னாடை, பாதுகைகள் முப்புரி நூல் முதலியவைகளும் அந்த முட்டையில் தென்பட்டன. காவலர்கள் ஒன்றும் புரியாமல் திகைத்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துங்கபத்திரை.pdf/21&oldid=1507348" இலிருந்து மீள்விக்கப்பட்டது