பக்கம்:துங்கபத்திரை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

தொத்துக் கிளியாக மன்னரின் தோள்பட்டையில் நின்று செவியைக் கடிக்க நினைத்தவன்; தொண்ணூராயிரம் யானை எதிர்த்தாலும் தோள்வலிமை காட்டி வெற்றிக்கு உத்திர வாதம் கூறும் நாகமநாயக்கர் இல்லாத நேரத்தில் மன்னரின் உயிரைக் குடிக்க நினைத்தவன்; பூனை போல் குழைந்து வாழ்ந்து பீஜப்பூர் கொடியை விஜயநகர்க் கோட்டையில் பறக்கவிடத் திட்டமிட்டவன். அவன் யார் தெரியுமா? அவையோரே, உண்மையைச் சொல்ல துணிந்தமைக்கு என்னை மன்னியுங்கள். அவர் பெயர் பண்டிதமணி ராஜா அய்யர்! ராஜா அய்யர்!! ராஜா அய்யர்!!! என்று கதறிக் கதறி சபையில் விழுந்தான் அந்தக் கிழவன்.

மன்னன் தலையில் இடி விழுந்ததுபோல் இருந்தது. தேள் கொட்டிய தொட்டில் குழந்தை போல் சபை வீறிட்டுக் கத்தியது.

அதுவரை குற்றவாளிக் கூண்டில் அமைதியாக நின்ற அந்த மகமதிய வீரன் பலமாகச் சிரித்தான். அந்தச் சிரிப்பொலி பண்டித மணியின் குரலைச் சபைக்கு நினைப்பூட்டியது. மன்னரும் அதைக் கவனித்தார். அவர் மனம் இருப்புக் கொள்ளவில்லை. எழுந்தார். "இந்துவாகப் பிறந்த நீ மகமதியன் வேடமிட்டு என்னைக் கொல்ல வந்த காரணம் என்ன? நீ ஒரு மகமதியனாக இருந்தால் நான் மகிழ்ந்திருப்பேன். எதிர்நாட்டான், எவனையும் கொல்ல நினைப்பதுண்டு என்று அமைதி பெறுவேன். நீ ஓர் இந்து! பெரும் புலவன்! பண்டிதமணி ! நீ ஏன் என்னைக் கொல்ல எத்தனித்தாய்? நீ சொல்" என்று ராஜா அய்யரைப் பார்த் துக் கேட்டான் மன்னன்; ராஜா அய்யர் பதில் சொல்ல வில்லை. ஊமையாக நின்றார், தரையில் சாய்ந்து கிடந்த குருட்டுக் கிழவன் தலையைத் தூக்கிப் பேசினான். "நன்றாக மகிழுங்கள் மன்னவரே, நன்றாக மகிழுங்கள்! அவன் இந்து அல்ல! மகமதியன்! இந்துவாக நடித்தான்? இது நூற்றுக்கு நூறு மெய் மகாராஜா! என்னை நம்புங்கள்! குற்றுயிராகக் கிடக்கும் கருப்பட்டிக் கவிஞன் கொற்றவனைக் காத்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துங்கபத்திரை.pdf/30&oldid=1507500" இலிருந்து மீள்விக்கப்பட்டது