பக்கம்:துங்கபத்திரை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

59

முடிந்தது. தமிழ்ப் பெருமக்கள் ராயர் என்றும், தெலுங்கர்கள் ராயலு என்றும், கன்னட மாந்தர் ராறு என்றும், பரிவுடன் அழைப்பதற்குப் பாத்திரமாக விளங்கியதற்குக் காரணமே அவரது சிரித்த மூகமும், சினம்கொன்ற தன்மையும்தான்.

ராயருக்கு மல் யுத்தத்தில் அளவு கடந்த பிரியம். தினந்தோறும் காலையில் மேனி முழுதும் நெய் பூசிக் கொண்டு, இரண்டு நாழிகை மல்யுத்தம் செய்துவிட்டுத் தான் குதிரை ஏறுவது வழக்கம். இதற்காகவே ராயர் அவர்கள் அவரது மலையக்கூட மாளிகையில் கைதேர்ந்த மல்லர்களை வளர்த்து வந்தார். போர் விளையாட்டுப் பயிற்சிகளில் அவர் பங்கேற்று இருக்கும்போது, தான் சக்கரவர்த்தி என்று நினைப்பதில்லை. லெட்சோப லெட்சம் மக்களின் தலைவன் என்பதையே மறந்துவிடுவார். மேலங்கி இருக்காது. முதுகுத்திரை போடமாட்டார். மல்லர்களுடனும் மற்ற வீரர்களுடனும் மனம் திறந்து பேசுவார். இது போன்ற பயிற்சிக் காட்சிகள் அடிக்கடி மக்கள் கண்களில் படக்கூடாது என்பதற்காகவே அதற்கென தனி மாளிகை எழுப்பினார். மலையக் கூடம் என்பது அந்த மாளிகையின் பெயர். கொலு மண்டபம் இருந்த மாளிகை புவனவிஜயம் என்று அழைக்கப் பெற்றது. மலையக்கூடத்திற்கும் புவன விஜயத்திற்கும் தொடர்பு இல்லை. அந்தப்புரம் வேறு தனி.எந்தப்புரம் இருந்து பார்த்தாலும் உள் கட்டிடம் தெரியாமல் உயர்ந்த மதில் சுவர்கள் அதனைச் சுற்றிக் காவல் புரிந்து கொண்டிருந்தன.

அடிக்கொருமுறை அன்னியர் படையெடுப்பாலும் ஆக்கிரமிப்புகளாலும் நொந்து நொடிந்து போன கலாசாரத்தை, துடிக்கும் இளம் வாலிபர்களின் ரத்தத்தை போர் முகத்தில் அள்ளித் தெளித்து அபிஷேகம் செய்து வெற்றி மேல் வெற்றி பெற்று அழியாச் செல்வமாகத் திகழ்ந்த விஜயநகர சாம்ராஜ்ஜியத்திற்கு இரண்டாவது நூற்றாண்டின் நிறைவு விழா வென்றால், அந்த விழாவை வெறும் திருவிழா என்று கூறிவிடமுடியுமா? தன் குழந்தைக்குப் பிறந்த நாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துங்கபத்திரை.pdf/59&oldid=1523634" இலிருந்து மீள்விக்கப்பட்டது