பக்கம்:துங்கபத்திரை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

என்றால்‌ ஏழையும்‌ மகிழ்கிறான்‌; குழந்தையின்‌ குமிண்‌ சிரிப்பில்‌ அவனது குடும்பக்‌ கவலை யெல்லாம்‌, புதையுண்டு போகின்றன, மடியிலே பணம்‌ இல்லாவிட்டாலும்‌ மனத்திலே பரவசம்‌ கூத்தாடுகிறது; குடிசைக்குள்ளேயே இந்தக்‌ குதூகலம்‌ என்றால்‌, ஒரு பேரரசு இரண்டாவது நூற்றாண்டு விழா-சிறப்புக்கு சொல்லவா வேண்டும்‌! ஒரே கோலாகல மயம்‌-இன்ப வெள்ளம்‌!

ஓவ்வொரு விளையாட்டுக்கும்‌ ஆயிரம்‌, பதினாயிரம்‌ என்து பரிசுத்தொகை நிர்ணயிக்கப்பட்டது. கத்திச்‌ சண்டையா அதற்குத்‌ தங்கவாள்‌. வேல்‌ எறிதலர? அதற்கு வைரப்பதக்கம்‌, கலைக்கூத்தா? பவளமாலை. இசைப்‌ போட்டியா? பொன்‌ ஆபரணக்‌ குவியல்‌, இப்படி ஒவ்‌வொரு போட்டிக்கும்‌ மன்னரே பரிசுகளைக்‌ தேர்ந்தெடுத்‌தார்‌, மன்னர்‌ சிரித்தால்‌ மந்திரிக்கு லாபம்‌ கிடைக்கும்‌, ஆனால்‌, விஜய நகரத்தில்‌ மன்னர்‌ சிரிப்பில்தான்‌ மக்களின்‌ ஜாதகமே அடங்கியிருந்தது.

பெரியவர்கள்‌, சில காரியங்களை மறந்து விட்டவர்கள்‌ போல்‌ தோன்றுவார்கள்‌. தெரியாதவர்களைப்‌ போல்‌ அமைதியாக இருப்பார்கள்‌, காலமென்னும்‌ களித்தரையில்‌ வேர்‌ விட்டுத்‌ தோற்றம்‌ இழந்து நிற்கும்‌ புளிய மரங்களைப்‌ போன்றவர்கள்‌ அவர்கள்‌. பார்வை இருக்காது; பலன்‌ உண்டு! சக்கரவர்த்தி ராயரும்‌ அப்படித்தான்‌, எல்லா விளையாட்டுகளுக்கும்‌ பரிசுகளை விதித்தவர்‌ அவருக்கு அதிக மாகப்‌ பிடித்திருந்த மல்யுத்தத்திற்கு மட்டும்‌ விதிக்காமல்‌ விட்டுவிட்டார்‌. அரசியல்‌ அதிகாரிகள்‌ அனைவரும்‌ ஒரு முறைக்குப்‌ பத்து முறை பட்டியலைப்‌ பார்த்தார்கள்‌. மன்னர்‌ மறந்துவிட்டார்‌ என்று அவர்கள்‌ நினைப்பு, ராயர்‌ சிரித்‌தார்‌. மற்றவர்கள்‌ எல்லோரும்‌ அவர்‌ முகத்தை நோக்கினார்கள்‌.

பிற நாட்டுக்காரர்கள்‌ கண்டு மிரளத்தக்க வகையில்‌ நம்‌ நாட்டில்‌ வளர்ந்தோங்கி இருக்கும்‌ மல்யுத்தத்திற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துங்கபத்திரை.pdf/60&oldid=1523637" இலிருந்து மீள்விக்கப்பட்டது