பக்கம்:துங்கபத்திரை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

61

என்ன பரிசு வைக்கலாம் என்பதை நாம் இப்போது முடிவு கட்ட வேண்டும். அகிலத்தில் எங்கும் இதுவரை தந்திராத பரிசாகவும், புதுமையாகவும் இருக்கவேண்டும்." என்றார் ராயர்.

சபையில் பெத்தன்னா இருந்தார். துர்ஜதி இருந்தார். தளபதி இல்லாமல் இருக்குமா? சிங்கராயனும் இருந்தான். வழக்கம் போல் அரியநாதன் மன்னருக்குப் பின்னால் இருந்தான்.

பெத்தன்னா கருத்தரங்கைத் துவக்கி வைத்தார். அவர் தானே புலவர் குழுவின் தலைவர்!

"விஜயநகரத்திற்கு கட்டியம் கூறி வாழும் சின்னஞ்சிறு ராஜ்ஜியங்களுக்கு ராஜப்பிரதிநிதியாக அனுப்பலாம்" என்றார் பெத்தன்னா.

"இதற்கு வேறு ஏதாவது மாற்று யோசனை இருக்கிறதா?" என்று மன்னர் சபையைப் பார்த்துக் கேட்டார்.

சபையில் சிறிது நேரம் அமைதி நிலவியது. பின் சிங்கராயன் பேசினான் :

"வெற்றி வீரர்களுக்குப் பதவிகளைத் தருவது ராஜ வம்சத்தில் பரம்பரைப் பழக்கமாகி விட்டது. என்னைக் கேட்டால் மல்யுத்த வீரர்களுக்கு எடைக்கு எடை தங்கம் கொடுக்கலாம் என்பேன்" என்றான் சிங்கராயன்.

"மன்னர் விரும்புவது புதுமையை! எத்தேசமும் உத்தேசித்துக் கூட இருக்க முடியாத பெரும்பரிசைத் தர விஜயநகரம் விரும்புகிறது. எடைக்கு எடை தங்கம் தருவது புதிதல்ல. கலிங்க தேசத்தில் தந்திருக்கிறார்கள். தென் பாண்டிய நாட்டில் கருவூலத்தையே திறந்து விட்டிருக்கிறார்கள். நான் சின்னவன் அனுபவமில்லாதவன் - என் ஆசையையும் தெரிவிக்கிறேன். மல் யுத்தத்தில் வெற்றி பெறுகிறவன் விஜயநகரத்தில் அவன் விரும்பும் ஒரு குமரிப் பெண்ணை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துங்கபத்திரை.pdf/61&oldid=1523639" இலிருந்து மீள்விக்கப்பட்டது