பக்கம்:துங்கபத்திரை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

“வா சொல்லுகிறேன்‌, முதலில்‌ கொஞ்சம்‌ சுக்குச்சாற கொண்டு வா, தொண்டை கமறுகிறது. எல்லாம்‌ உனக்‌காகத்தான்‌ கங்கா!'”? என்று குழந்தை போல்‌ பேசினார்.

கங்கா நடந்தாள்‌. ௮வள்‌ நடையைப்‌ பார்த்துப்‌ பெரு மூச்சு விட்டார்‌ புலவர்‌, ஓர்‌ அழகான பெண்ணைப்‌ பெற்று விட்ட ஆணவப்‌ பெருமூச்சு ௮து.

கங்கா, வெற்றிக்கு வழி வகுத்துவிட்டேன்‌, கண்ணே! விசுவநாதன்‌ இனி உன்‌ காலடியில்‌! அடுத்த கிழமை இந்தச்‌ சரணாகதிப்‌ படலம்‌ ௩டக்கப்‌ போகிறது” துச்ஜதி இடிபோல்‌ முழக்கமிட்டு சிரித்துக்‌ சொண்டே சொன்னார்‌.

“சொப்பனம்‌ கண்டீர்களா அப்பா? நேராக அரண்‌மனையிலிருந்து வருகிறீர்களா! நீங்கள்‌ அன்றிலிருந்து இப்படியேதான்‌ புலம்பிக்‌ கொண்டிருக்கிறீர்கள்‌” என்று சிரித்தாள்‌ கங்கா.

"கங்கா...” - துர்ஜதிக்கு கோபம்‌ வந்து விட்டது. அனலாகி விட்டார்‌. நாக்கில்லா மண்புமுக்களைப்‌ போல்‌ மண்டை நரம்புகள்‌ புடைத்துக்‌ கிளம்பி விட்டன. கண்கள்‌ இரண்டும்‌ விளக்காக எரிந்தன. எப்போதாவதுதான்‌ அவருக்கு இப்படி வரும்‌. வந்தால்‌ பலி கொள்ளாமல்‌ போகாது.

“அதிகாரத்தை மறந்து, அந்தஸ்தை மறந்து உனது எதிர்கால வாழ்க்கைக்காக அல்லும்‌ பகலும்‌ மூளையை உருக்கிக்‌ கொண்டு அலைகிறேன்‌. நீ என்னை கேலியா செய்‌கிறாய்‌? தருதலை! தாய்ப்பிள்ளை என்று பார்த்தால்‌ தலைக்கு மேல்‌ போகிறுவே!” கனல்‌ பறக்க பொழிந்தார்‌.

கங்காவுக்குக்‌ கண்‌ கலங்கி விட்டது. வண்டியில்‌ பூட்டிய புதுக்‌ காளைபோல்‌ வெறித்து தலை கவிழ்ந்து விட்‌டாள்‌.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துங்கபத்திரை.pdf/64&oldid=1524077" இலிருந்து மீள்விக்கப்பட்டது