பக்கம்:துங்கபத்திரை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

65

"கங்கா!"

அவள் பேசவில்லை. குனிந்த தலை நிமிரவில்லை.

"என்னைப் பார் கங்கா! நான் யார்? இந்தச் சரீரம் யாரால் வளர்க்கப்பட்டது? எந்த அரசாங்கத்தின் தயவால் நான் இந்நிலைக்கு உயர்ந்தேனோ அந்த அரசாங்கத்தின் ரகசியங்களையே இன்று விலை கூறத் துணிந்து விட்டேன். யாருக்காக! எனக்காகவா? எல்லாம் உனக்காக! இப்போது பொன்னும் பொருளும் எனக்குத் துரும்பாகத் தெரிகின்றன. உலகத்தை ஒரு சுண்டைக்காயாக நினைக்கிறேன். உன் சுகந்தான் எனக்குச் சாந்தி. உன் சிரிப்புதான் எனக்குச் செல்வம். உன் நன்மைக்காக யார் யாரை இழுத்துப் போட்டிருக்கிறேன் தெரியுமா? விசுவநாதனைக் கவிழ்க்க ஒரு அற்புதமான திட்டத்தை நானும் அரியநாதனும் சேர்ந்து வகுத்திருக்கிறோம். இதிலிருந்து விசுவநாதன் தப்புவதற்கு மார்க்கமே இல்லை."

கங்கா தலையைத் தூக்கினாள். பிடித்தமானவர்களைப் பற்றிப் பேசினால் மனம் புரண்டு படுக்கிறது. மயிர்க்கால் களை மூளை சுண்டி இழுக்கிறது. தண்ணீரின் சூடு தணிகிறது. முக பாவங்களின் பொருளே தலை கீழாகத் திரும்பி விடுகின்றன.

துர்ஐதி தொடர்ந்தார். அடுத்த கிழமை நமது நாட்டில் தேசியத் திருநாள். மல்யுத்தத்தில் வெற்றி பெறுகிறவனுக்கு அவன் விரும்பும் குமரிப் பெண்ணே பரிசுப்பொருள். அதோடு விஜயநகரத்தில் அவனுக்கு நிகரான யுத்த வீரன் இல்லை என்ற பட்டயமும தரப்படும். மல் யுத்தத்திலே வெறி பிடித்துத் திரியும் விசுவநாதன் இதில் கலந்து கொள்ளாமல் இருக்கப் போவதில்லை. அவனை வெற்றி கொள்ள யாரும் பிறக்கப் போவதும் இல்லை. அவன் வெற்றி பெற்றால் அவனுக்கு பிடித்தமான அழகியை மணந்து கொள்ளலாம். நான் நிச்சயமாக நம்புகிறேன். உன்னைக் காட்டிலும் சிறந்த அழகி நமது நாட்டில் இல்லை. அரியநாதன்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துங்கபத்திரை.pdf/65&oldid=1524557" இலிருந்து மீள்விக்கப்பட்டது