பக்கம்:துணிந்தவன்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 91 மூலம் ஏகப்பட்டவர்களை ஒன்று கூட்ட முடியாது; நல்லுபதேசங்கள் மிகக் குறைந்த சீடர்களையே சேர்த்துத் தரும்; ஆனால், மக்களின் வெறுப்பை வளர்ப்பதன் மூலம் வெறியைத் தூண்டுவதனால் - மிகப் பலரை ஒன்று திரட்டலாம். இதைப் புரிந்துகொண்டார் பரப்பிரம்மம் பி.ஏ. எனவே, அவர் எல்லாவற்றையும் காரசாரமாகத் தாக்கி னார். எல்லோரையும் குறைகூறினார். குறுகிய காலத்திற் குள் சிந்தனைச் சூரியன் என்ற பட்டமும் பெற்றுவிட்டார். 'நமது அமைப்பு பலம்பெறவேண்டும். அதற்கு வெள்ளி காங்கிரீட் தேவை. அன்பர்களே, அள்ளித் தாருங் கள்!' என்று முழக்கம் செய்தார். 'வழிகாட்ட வந்தவர். அவர் பேச்சால் வசீகரிக்கப்பட்டவர்கள் ரூபாய் ரூபாயாக அனுப்பி வைத்தார்கள். நிதி வசூலிப்பது லாபகரமான தொழில் ৫য় জয়ী அறிந்த தலைவர் அவ்வப்போது எதன் பெயரையாவது சொல்லி நிதி கேட்டு, நாட்டை நோக்கி இரு கைகள் நீட்டும் வழக்கத்தை மேற்கொண்டார். வெற்றியும் கண்டார். ஆசை மனிதனைச் சும்மா விட்டுவிடுமா? பேங்க் பேலன்ஸ் பெருகவில்லையே இன்னும் என ஏங்கின்ார் சிந்தனைச் சூரியன். அவர் சிந்தனையில் அற்புத மின் வெட்டு பளிச்சிட்டது. தனது நாற்பத்து நாலாவது பிறந்த நாளை அமோகமாகக் கொண்டாடத் திட்டமிட்டார். அதற்கென ஒரு கமிட்டி பிறந்தது. சூரியனின் ஒளி பெற்று வாழும் சந்திரன்கள் பலரும் அதில் முக்கியஸ்தர்கள். அவர்கள் நிதி வசூலில் ஈடுபட்டார்கள். அவர்களுக்கு வழிகாட்டி, அன்றாட ஆலோசனை சொல்லும் பொறுப்பை பரப்பிரம்மமே திறம்பட நிர்வகித்தார். தமிழனின் சராசரி வயது இருபத்தெட்டுதான் மிஞ்சிப்போனால் முப்பத்திரண்டு நமது சிந்தனைச் சூரியன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/103&oldid=923461" இலிருந்து மீள்விக்கப்பட்டது