பக்கம்:துணிந்தவன்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 துணிந்தவன் அருமையான கார் ஒன்று வந்தது. அது வந்த சத்தமே கேட்கவில்லை அவனுக்கு. அதனுள் பகட்டாக ஆடை அணிந்த ஒருவனும், ஒய்யாரி ஒருத்தியும் இருந்தார்கள். அவளிடம் அழகைவிட, கவர்ச்சி அதிகமிருந்தது. அவள் கண்கள் காந்த சக்தி பெற்றிருந்தன! மாதவன் விலகாமல் அவள் முகத்தையே பார்த்த படி நின்றுவிட்டான். 'ஏ மடையா, வழியை விட்டு விலகு. ஏன் இப்படி முழிச்சபடி நிக்கிறே?" என்று கத்தினான் காரில் இருந்தவன். அவள் மீண்டும் சிரித்தாள். 'பைத்தியம் போலிருக்கு!’ என்று அவள் முணுமுணுத்தாள். அது மாதவன் காதுகளிலும் பட்டது. அவன் பாதை ஒரம் சென்றான். நின்று, சூடாக ஏதாவது சொல்ல வேண்டும் என்று தீர்மானிப்பதற்குள் கார் வேகமாக நகர்ந்தது. மடையன் பட்டிக்காட்டான் மிட்டாய்க் கடையைப் பார்க்கிறமாதிரி.... ' கார் ஒட்டிய வனின் பேச்சு பூராவும் நன்கு காதில் படாதவாறு அமுக்கியது அலங்காரியின் கலகலச் சிரிப்பொலி. மாதவனுக்கு ஆத்திரம் பொங்கியது. 'பணத்திமிர் படைத்த வீணர்களே!' என்று கத்தினான். காரில் இருந்த வர்களுக்கு அது கேட்டிருக்குமோ என்னவோ, அவ னுக்குச் சிறிது திருப்தி ஏற்பட்டது. ரோடு கார் வைத்திருப்பவர்களுக்கு மட்டும்தான் சொந்தமோ? நடந்து பேர்கிறவன் எப்பவும் தரித்திரம் பிடித்த - மகாமோசமான - ஒரத்திலேதான் போகவேண்டு மாக்கும்?.... மடையனாம்! அந்தப் பயல் பேசி விட் டான். அவளுக்கு இளிப்பு தாங்கவில்லை. அவள் அவ னுடைய மனைவியோ, இல்லை வேறு யாருமோ காம வெறி பிடித்த ஆசைநாயகியாகத்தான் இருப்பாள்...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/50&oldid=923524" இலிருந்து மீள்விக்கப்பட்டது