பக்கம்:துணிந்தவன்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 துணிந்தவன் 'ஏய் என்னடா ஒன்னுமில்லேங்கிறே? பொய் சொல்லலாமின்னு உங்க வாத்தியார் கற்றுக்கொடுத் go - திருக்காரா?' "பொய் சொல்றது தப்பு இல்லே என்றுதான் சொன்னார் என்று பையன் சொல் வான் என அவர் எதிர்பார்க்கவில்லை. ஆனால் பாலசந்திரன் சொன்ன பதில் அதுதான். பேபியின் பேச்சைப் போலவே, மகனின் கூற்றும் அவரைத் திடுக்கிட வைத்தது. 'பிள்ளைகளைக் கெடுப்பதுதான் உன் தொழிலோ? அதுக்குத்தான் உன்னை இந்த வீட்டிலே சேர்த்தேனோ? என்று பவானந்தம் கூப்பாடு போட்டார். 'பிள்ளைகளை யாரும் கெடுப்பதில்லை. அவர வருக்கு இயல்பான சில குணங்கள் உண்டு. அவற்றை ஒடுக்கிவிட முயல்கிறார்கள் பெரியவர்கள். குழந்தைகளின் சுபாவமான பண்புகளைக் கவனித்து, அவற்றை அடக்கி ஒடுக்காமல் வளரவிட்டு, வாழவழிவகுத்துக்கொடுப்பது தான் புது முறைக்கல்வி.....' 'நிறுத்துடா உன் அதிகப் பிரசங்கத்தை' என்று எரிந்து விழுந்தார் பெரியவர். இனிமேல் உனக்கு இங்கே சரிப்பட்டு வராது. நாளைக்கே நீ இங்கிருந்து போவதற்கு வேண்டிய ஏற்பாடுகளைக் கவனி, போ!' என்றார். 'இதிலென்ன வாய்தா? நான் இப்பவே கிளம்பி விடுகிறேன்...' 'பணம் பாக்கியெல்லாம் கணக்குப் பாக்கணும்' என்று இழுத்தார் அவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/70&oldid=923546" இலிருந்து மீள்விக்கப்பட்டது