பக்கம்:துணிந்தவன்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 59 'அதெல்லாம் தேவையில்லை. பணம் பாக்கி எதுவுமில்லை என்றே வைத்துக் கொள்ளுங்கள் என்று மாதவன் புன்னகையோடு கூறினான். 'ஸார் என்று கண்கலங்க அவனை நெருங்கினான் பாலசந்திரன். ' லார்' என்று அழுது கொண்டு ஓடிவந் தாள் பேபி. 'ஸ்ாரு மாச்சு கீரு மாச்சு: டேய் சந்தர், ஏய் பேபி! உள்ளே போlங்களா? சவுக்கை எடுக்கட்டு மா?' என்று ஆவேசமாக எழுந்தார் தந்தை. குழந்தைகள் அஞ்சி நடுங்கி மறைவிடம் தேடி οδΤΙτήg, είr. 'குழந்தைகளை அடிப்பதுதான் அவர்களைக் கெடுக்கும் வழியாகும். குழந்தைகளை அடிப்பது மகா மடத்தனம் என்று அறிஞர்கள் அநேகர் எழுதியிருக் கிறார்கள்.. ' என்று மாதவன் பேசவும், அவருக்கு எரியும் தீயில் பெட்ரோல் ஊற்றுவது மாதிரி ஆயிற்று. 'சரிதாம் போடா, அயோக்கிய நாயே!' என்று சீறிப்பாய்ந்தார் அவர். 'ஒவ்வொருவனும் தன்னையே உலகத்தில் காண் கிறான். தன்னைக் கொண்டே உலகத்தை எடை போடு கிறான். ' 'ஏய், இங்கேருந்து போறியா, இல்லை.....' மாதவன் முறுவல் பூத்தான். 'ஐயா, ஒரு முக்கிய பாயிண்ட். தமிழ்நாட்டு பலகார வரிசைகளில், இனிப்பு ரகத்திலே மோதகம் என்பதும் சேரும். முறுக்கு, சீடை, தேங்குழல் இதெல்லாம் தமிழர்களின் கண்டுபிடிப்புதான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/71&oldid=923547" இலிருந்து மீள்விக்கப்பட்டது