பக்கம்:துணிந்தவன்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 துணிந்தவன் உங்கள் ஆராய்ச்சிநூலில் இந்த உண்மையை எழுத மறந்து விடாதீர்கள்" என்று அமைதியாகச் சொன்னான். அவர் பதிலுக்குக் காத்திராமல் அங்கிருந்து நகர்ந்தான். 12 மாதவனின் பொருள்கள் எல்லாம் ஒரு சிறு பெட் டிக்குள் அடங்கிவிட்டன. அந்தப் பெட்டியைக் கையில் பிடித்தவனாய் அவன் மூச்சந்தி ஒன்றில் நின்றான். இனி எங்கே போகலாம்? எங்கு தங்குவது? இப்பிரச்சனையுடன் ஒவ்வொரு வீதியாக மாறி மாறிப் பார்த்துநின்றபோது, வசந்தாவின் கார் வருவது தென்பட்டது. அட இம்முறையும் அதிர்ஷ்டம் நம் பக்கத் தில்தான் இருக்கிறதுபோலும்!' என்று உளம் மகிழ்ந்தான் அவன். வசந்தா அவனைப் பார்த்ததும், காரை அவனருகில் கொண்டுவந்து நிறுத் னாள். ஏது இவ்வேளையில் பெட்டி யும் கையுமாகக் கிளம்பிவிட்டீர்கள்? எங்கு பிரயாணம்? ' என்று விசாரித்தாள். - "எங்கே போவது என்று எனக்கே தெரியவில்லை. திடீரென்று நான் நடுத்தெரு நாராயணன் ஆகிவிட்டேன்' எனக் கவலைகொஞ்சமும் இல்லாத குரலில் பேசினான் அவன். 'என்ன விஷயம்? பாலு வின் டீச்சர் என்ற பதவி என்ன ஆயிற்று?" 'நான் எதிர்பாரதவிதமாக அது என்னை வந் தடைந்தது. நான் எதிர்பாராத விதத்திலேயே என்னை விட்டுப் போய்விட்டது.!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/72&oldid=923548" இலிருந்து மீள்விக்கப்பட்டது