பக்கம்:துணிந்தவன்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 துணிந்தவன் தயங்கினாள். பிறகு அவன் முகத்தை நன்றாக நேரே நோக்கி னாள். அவன் யார் என்பது அவளுக்குப் புரிந்திருக்க வேண்டும். ஆகவே அவள் முகம் பிரகாசம் பெற்றது. இதழ்களில் புன்னகை ஊர்ந்தது. நமஸ்காரம்' என்று கரம் குவித்தாள் அவள். அவளை அந்நேரத்தில் அந்த இடத்தில் சந்திக்க முடியும் என மாதவன் எண்ணியதில்லை. அதே மாதிரி தான், சந்திக்க நேரிட்டால் அவளாகவே முன்வந்து பேசத் துணிவாள் என்று அவன் நினைத்ததும் கிடையாது. அவளைக் கண்டால் எப்படி அணுகலாம், எவ் வாறு பேச்சு கொடுத்து வம்புக்கு இழுக்கலாம் என்பது ப்ற்றி எல்லாம் அவன் எண்ணத்தறியில் இழைகள் ஒட விட்டுப் பொழுது போக்குவது வழக்கம்தான். ஆனால் இப்போது அவன் திட்டமிட்டிராத முறையிலே ஒரு வாய்ப்பு கிட்டிவிட்டது. அவனுக்கு மிகவும் செளகரியமான சந்தர்ப்பம் அது. . அவன் முறுவல் புரிந்தவாறே வண்டியை விட்டுக் கீழே இறங்கினான்: 'நமஸ்காரம்' என்றான். 'என்னை உங்களுக்குத் தெரிகிறதா? என்று கேட்டான் மாதவன். பிரமாதம்ான ஹாஸ்யத்தைக் கேள்வியுற்றவள் போல அவள் கலகலவெனச் சிரித்தாள். அந்தச் சிரிப்பு! அவன் மறக்கமுடியாத, நினைவிலே நீங்காத வலிமை யுடன் நின்று அவன் இதயத்தை சதா குத்திக் குடைந்து கொண்டிருந்த, அதே சிரிப்பு இப்போதுகூட அவன் உள் ளத்திலே ஏதோ ஒரு நரம்பு எப்படியோ இசைகேடாக முறுக்கேறிக் கொண்டது போல் வேதனை பிறந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/92&oldid=923570" இலிருந்து மீள்விக்கப்பட்டது