பக்கம்:துணிந்தவன்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 துணிந்தவன் 'ஏதாவது கார் வரும் என்று நானும் பார்த்தபடி நிற்கிறேன். இதுவரை எதுவுமே தலை காட்டலே. என் அதிர்ஷ்டம் அப்படி இருக்கு!" என்று சொல்லி, லேசாகச் சிரித்தாள் அவள். 'என் அதிர்ஷ்டம்தானோ என்னவோ!' என்று அவன் நினைத்தான் சொல்லவில்லை. 'நீங்கள் விரும்பினால், என் வண்டியில் வரலாம். எங்கு போவேண்டுமோ, அங்கேயே கொண்டுபோய்ச் சேர்த்து விடுகிறேன்' என்று குழைவாகப் பேசினான் அவன். "வீட்டுக்குத்தான் போகனும் வழியில், மெக் கானிக் ஒருவனிடம் தெரிவித்துவிட்டுப்போகணும் - ஆள் அனுப்பிக் காரைக் கவனிக்கும்படி' என்று இழுத்தாள் அவள், 'சரி. ஏறுங்கள்' என்றான் மாதவன். அவள் அவனது சாரட்டில் ஏறி உட்கார்ந்த பிறகு அவனும் அமர்ந்துகொண்டான். வண்டி கிளம்பியது. மாதவனின் உள்ளம் உல்லாசச்சிறகுகள் பெற்று ஆனந்த வானிலே சஞ்சரித்தது. அவன் உள்ளம் கூட குதுகலிப்புடன் மிதந்து கொண்டிருந்தது. அவள் முகம், முந்திய கவலையைத் துறந்துவிட்டு, அளவிலா மகிழ்ச்சி யால் நன்கு சோபித்தது. 'உங்களைப்பற்றி நான் அறிந்து கொள்ளலாமோ?" என்று வினவினான் அவன். 'களுக்குச் சிரிப்பு உதிர்ந்தாள். அவள். என் பெயர் ஜெவந்தி' என்றாள். அவள் வீடு இருக்கும் இடம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/94&oldid=923572" இலிருந்து மீள்விக்கப்பட்டது