பக்கம்:துணிந்தவன்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 83 பற்றி அறிவித்தாள். சொந்தவிஷயமாக அவள் காரில் தனி யாகக் கிளம்பி வந்தாள்; எதிர்பாராதவிதமாக காருக்குக் கோளாறு ஏற்பட்டுவிட்டது. மாதவன் வராதிருந்தால் அவள் இன்னும் எவ்வளவு நேரம் அங்கேயே வெயிலில் கருகிக்கொண்டு நிற்க வேண்டுமோ அவள் இவ்விஷயங் களைச் சொல்லி முடிப்பதற்குள் எத்தனையோ தடவைகள் சிரித்துவிட்டாள். ‘'சிரிக்காமலே இருக்கமுடியாது போலும் இவ ளால்!” என்று முணங்கியது அவன் மனம். ஜெவந்தி குறிப்பிட்ட விலாசத்தை அடைந்ததும் மாதவன், 'இதுதான் உங்கள் வீடா?’ என்றான். அது தனித்து, ஒரு காம்பவுண்டினுள், கவர்ச்சிகர மாக அமைந்திருந்தது. சிறு கட்டிடடம்தான். ஆயினும் எடுப்பாக விளங்கியது. நாலைந்து அரளிச்செடிகளும் நன்கு வளர்ந்து நின்றன. 'ஆமாம். வாங்கி இரண்டு வருஷம்தான் ஆகிறது. உள்ளே வந்து பாருங்களேன்’ என்று கனிவுடன் அழைத் தாள் காரிகை. ‘'எதுக்கு! இங்கே இருந்து பார்த்தாலே...' அவன் ஒப்புக்காக இழுத்த பேச்சைக்கூட முடிக்க விடவில்லை அவள். 'நல்லாயிருக்குது நீங்கள் பேசுவது எனக்கு உதவி செய்த உங்களை நான் சும்மா அனுப்பிவிடலாமா? ' என்று கூறிச்சிரித்தாள். அவள் கருவிழிகளின் நீளிமைகளும் 'வாவா என்று அழைப்பதுபோல் அடித்துக் கொண்டன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/95&oldid=923573" இலிருந்து மீள்விக்கப்பட்டது