பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

தும்பைப் பூ


"அம்மாவும் சொன்னார்களா?" என்று கேட்டறிய வேண்டுமென்று மங்கை ஆவல் கொண்டாள். ஆனால் அன்னையின் முன்னர் அவ்விதம் கேட்டால், தான் மன வருத்தத்தோடு திரும்பி வந்துள்ள விஷயம் தெரிந்துவிடுமே என்று வாளாவிருந்தாள்.

சிறிது நேரங் கழித்து, மங்கை சிவகுமாரனை ஏறிட்டுப் பார்த்து, "போவோம், சிவா!" என்று சொன்னாள். "ஆமாம்; பட்டணத்துக்குத் திரும்ப டிரெயின் எப்போது போகிறது? தெரியுமா சிவா?"

சிவகுமாரன், "தெரியும்; வரும்போதே கேட்டுக் கொண்டு வந்தேன், பகல் தனுஷ்கோடி பாஸஞ்சர்; தப்பினால் செங்கோட்டை பாஸஞ்சரில் நாம் போகலாம். எதற்கும் சீக்கிரம் ஸ்டேஷனுக்குப் போய்விட்டால், சௌகர்யம்போல் போகலாம்" என்று பதில் சொன்னான்.

மங்கை, "இதோ ஒரு நொடியில் பகல் உணவைத் தயாரித்து விடுகிறேன். சாப்பிட்டுவிட்டுப் புறப்படுவோம்" என்று கூறிவிட்டு அவசரமாக உள்ளே செல்ல முயன்றாள்.

"வந்து ஆறேழு நாள்கூட ஆகவில்லை. அதற்குள்...உம், குழந்தை அப்படியிருக்கும்போது போகத்தான் வேண்டும்" என்று மெல்ல சிவகாமியம்மாள் தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்.

மங்கை இது கேட்டுச் சடக்கெனத் திரும்பி உதட்டின் மீது விரலை வைத்துச் சும்மா இருக்குமாறு சிவகுமாரனுக்குச் சைகைக் காட்டினாள்.

சிவகுமாரன் மங்கையர்க்கரசியின் பெருங் குணத்தை மனதுக்குள் வியந்து கொண்டிருந்தான். பெற்ற தாயிடம் கூடத் தான் மன வருத்தத்துடன் வந்ததைச் சொல்லாமல் சாதுரியமாக நடந்து கொண்டதோடு இப்போது - வந்து கூப்பிடும்போது மறுமொழி கூறாமல் உடன் வரவல்லவா உடன்பட்டு விட்டாள்? இவ்வளவு உயர்ந்த மனப்பான்மை