பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தும்பைப் பூ

113


பிள்ளையவர்கள் தம் மனைவியைக் குறிப்போடு பார்த்தார். மழைத்துளி போல கண்ணீரைச் சோரவிட்டுக் கொண்டிருந்த திலகவதி கணவன் பார்வையை எதிரிட மாட்டாது, தலை குனிந்து கொண்டாள். அவள் முகத்தில் வெட்கம் வழிந்தது.

சிவகுமாரன் பிரயாணப் பையுடன் உள்ளே போகலானான். விசுவநாதனும் மன ஆறு தலுடன் போனான்.

9

உதய ஞாயிற்றின் கதிரொளி ஜன்னல் வழியாக அறைக்குள் நுழைந்து வெளிச்சத்தை அதிகமாக்கிக் கொண்டிருந்தது. அவ்வளவு அதிகாலையில் எறும்புகள் மேல் நோக்கிச் சாரி சாரியாகச் சுவரின் மீது போய்க் கொண்டிருந்தன. அவற்றில் பெரும்பாலானவை முட்டைகளைத் தாங்கியிருந்தன. கீச், கீச்செனச் சப்தமிட்டவாறு சிட்டுக் குருவிகள் ஜோடி ஜோடியாகப் பறந்து வருவதும் போவதுமாயிருந்தன. அவை தங்கள் சிறு மூக்குகளால் வைக்கோலையும் தென்னங் கீற்று இலைகளையும் கொத்திக் கொண்டு வந்து முகட்டில் வைக்கலாயின.

சதானந்தம் பிள்ளை சோபாவில் சாய்ந்தவாறு அன்று காலை வந்த "ஹிந்து" பத்திரிகையைப் படித்துக் கொண்டிருந்தார். அவர் போட்டிருந்த மூக்குக்கண்ணாடியின் தங்க விளிம்பில் சூரிய கிரணம் பட்டுத் தகதகத்தது. ஒவ்வொரு பக்கமாகப் புரட்டிச் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்த அவர் ஒரு பக்கத்தில் பி. ஏ. பி. எஸ் ஸி. ஆனாஸ்., பி. ஓ. எல்முதலிய பரீட்சைகளின் 'ரிஸல்ட்' வந்திருப்பதைக் கண்டு 'நெம்பர்களைக்' கவனிக்கலானார். பி. எஸ் ஸி, ஆனர்ஸ். 'ரிஸல்டை' ஊன்றிக் கவனித்து வந்த அவருடைய முகத்தில் ஏமாற்றம் தோன்றலாயிற்று. அவர் ஒரு முறைக்கு மூன்று முறை அந்த 'ரிசல்ட்' நெம்பர்களைத் திருப்பித் திருப்பிப்