பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132

தும்பைப் பூ


அவன் இரண்டு மூன்று அடி எடுத்து வைத்துக்கூட இருக்கமாட்டான். இதற்குள் அவர் விசுவநாதனை நோக்கி, "எதற்கும் நீ போனில் டாக்டரைக் கூப்பிட்டுத் தகவல் சொல்லி உடனே வரச் சொல்" என்று பதட்டந்தோன்றச் சொன்னார்.

விசுவநாதனும் ஒடினான்.

சதானந்தம் பிள்ளை கீழே குனிந்து மனைவியின் நாடியைத் தொட்டுப் பார்த்தவாறு, "கோகிலா! கொஞ்சம் குளிர்ந்த நீர் கொண்டு வா" என்று கூறினார்.

கோகிலா பின் பக்கம் போனாள்.

10

நகரம் நவநாகரிக நாரீமணி போல, மினுக்கிக் குலுக்கி ஒய்யாரமாக நடை போட்டுக் கலகலவென நகைத்துக் கொண்டிருந்தது. ஆம்; பொங்கல் புது நாள் மக்களைப் பூரிப்பில் ஆழ்த்திப் புத்தாடை பூண்டு அணிமணிகள் தரித்து ஆண்களும் பெண்களும் குழந்தை குட்டிகளுடன் வளைய வந்து கொண்டிருந்தது, பார்ப்பதற்கு நகரமே நளினமாக நடனமாடுவது போன்ற பிரமையைத் தான் உண்டு பண்ணியது. தொடர்ந்தாற்போல் ஐந்தாறு வருஷங்கள் மழையில் லாமல் இவ்வருஷம் பருவமழை பெய்து வயல்களைப் பசுமையாக்கியது போல் மக்களுடைய வாழ்க்கையிலும் பசுமையை ஏற்படுத்தியதால் அவர்கள் பொங்கல் விழாவைப் பூரிப்போடு கொண்டாடி மகிழ்ந்தனர். வானமா மழை காணுது வாடி யிருக்கும் பயிர்கள் போல், பஞ்சத்தால் பரதவித்த மக்கள் முன் ஆண்டுகளில் பொங்கல் வந்து பூரிப்பின்றிப் பட்டினி பசியால் நலிந்திருந்தனர். அமுத மழைத் துளிகள் விழுந்ததும் சாவியாகிச் சரிந்து விழும் நிலையிலிருந்த பயிர்கள் குப்பெனத் தளிர்த்துத் தலைதுாக்கி நிற்பதுபோல், பருவமழையால்