பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தும்பைப் பூ

133


பயனடைந்த மக்கள் பல ஆண்டுகளுக்குப் பின் இவ்வருஷந்தான் மகிழ்ச்சிப் பொங்கலோடு பால் பொங்கவிட்டு அருக்கனில் சோதிவைத்த அருள் இறைவனுக்குப் படைத்துப் பின் மனைவி மக்களுடன் வயிறார உண்டு பேருவகை கொண்டார்கள்.

'தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்னும் பழமொழிக்கு ஏதுவான தை மாதம் பிறந்த-அதாவது பொங்கல் நாள் வந்த மூன்றாம் நாள்,' காணும் பொங்கல்' என்று கூறிக் கொண்டு களிப்பு மிகக் கொண்ட மக்கள் உறவினரையும் நண்பர்களையும் உவந்து போய்ப் பார்த்து அளவளாவி விட்டு வரும் நன்னாள். அன்று மக்கள் சாரி சாரியாகப் பல பக்கங்களிலும் போய்க்கொண்டிருந்தார்கள். செல்வத்தில் திளைத்திருந்தவர்கள் கார்களிலும், குதிரை வண்டிகளிலும் செருக்கோடு சென்று கொண்டிருந்தனர். பொருளிலும் பிறவற்றிலும் மத்திய தரமாகவுள்ள மக்கள் வாடகை வண்டிகளில், பஸ்ஸில் போகலாயினர். ஏழை மக்கள் கால் நடையாகச் செல்லலாயினர். பாட்டாளி மக்கள் கூட்டம் பள்ளுப்பாட்டு பாடித் தெம்பாகச் செள்று கொண்டிருந்தது, கூலி வேலை செய்யும் குமரிப் பெண்களும் நடுத்தர வயது மகளிரும் தங்களுக்குத் தெரிந்தவர்களின் வீடுகள் தோறும் சென்று கும்மியடித்துப் பொங்கல் இனாம் காசு பெற்றுப் போய்க் கொண்டிருந்தனர்.

மாலை மஞ்சள் வெய்யிலில் மக்கள் இவ்விதம் வையாளி வந்து கொணடிருந்தது பார்க்கக் கண் கொள்ளாக் காட்சியாயிருந்தது. மக்கள் முகங்களில் மகிழ்ச்சி துளும்ப, கலகல வெனப் பேசிக்கொண்டு போன கலகலப்பொலி நகர் முழுவதுமே எதிரொலி செய்து கொண்டிருந்தது.

இவ்விதம் எங்கு பார்த்தாலும் யாரைப் பார்த்தாலும் ஆனந்தம் தாண்டவமாடிக் கொண்டிருக்க, ஒரேயொரு வீட்டில் மட்டும், ஒரு சிலர் முகங்களில் மட்டும் சோகம் குடி கொண்டிருந்தது. மயிலாப்பூர் செந்தோம் ரோட்டிலுளள