பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134

தும்பைப் பூ


சதானந்தம் பிள்ளையவர்களின் மாளிகை பலவகையிலும் சோபையிழந்து காணப்பட்டது. ஒரு மணிக்கொரு தரம்காலை மாலைகளில் காலை மணிக்கொரு தரம் அடிக்கும் செந்தோம் மாதாகோவில் மணியின் 'டணார், டணார் ’ என்ற ஒலி கூட அவ்வீட்டிலுள்ளோரைத் துயரத்திலிருந்து துயில் எழுப்பவில்லை. அவ்வளவுக்கு அளவிடமுடியாத துக்கம் அவர்களை ஆட்கொண்டிருந்தது. இதற்குக் காரணம் சொல்லவேண்டியதில்லை. அந்த வீட்டுத் தலைவியான திலகவதியம்மாள் திடீரெனப் பாவாதத்தால் பீடிக்கப்பட்டுப் படுகிடையாகி, "இப்பவோ, பின்னையோ, இன்னும் சற்று நேரத்திலோ!" என்றும் 'ஆக்கை அகத்ததோ, புறத்ததோ!' என்றும் சொல்லக்கூடிய நிலையில் இருந்து வரும்போது வீட்டிலுள்ளார்க்கு எப்படி கலகலப்பாய் இருக்க முடியும்?

விளையாட்டைப்போல், திலகவதியம்மாள் நோயில் விழுந்து ஆறு மாதத்துக்கு மேலாய்விட்டது. மூத்த மகன் பரீட்சையில் தேர்ச்சிபெருமல் போய்விட்டதையும் அரசாங் கத்துக்கு எதிரான இயக்கங்களில் ஈடுபட்டிருப்பதால் அடக்கு முறைக்கு ஆளாகவேண்டிய அபாய நிலையில் இருப்பதையும் ஒரே சமயத்தில் கேட்ட அதிர்ச்சியினால், ஏற்கனவே நோயில் நலிந்துள்ள திலகவதியைப் பாவாதம் பற்றிப் பல விதமான பிணிகளைக் கிளைக்கச் செய்தும் நோய் நீங்கிய பாடில்லை. ஒன்று மாறி ஒன்று வந்து கொண்டேயிருந்தது. சதானந்தம் பிள்ளையவர்கள் முதலில் ஆங்கில வைத்திய முறைகளால் சிகிச்சை செய்து பார்த்தார். அதனால், நீங்கா தென்று அறிந்தபின், மாசிலாமணி முதலியாரின் யோசனை பின்படி, ஆயுர்வேதம், சித்தவைத்தியர்களைக் கொண்டு, சிகிச்சை செய்யலானர். இவற்ருலும் உடனடியாகப் பலன் ஏற்படாமல் போகவே, யூனிை, ஹோமியோபதி வைத்திய முறைகளாலும் கிகிச்சை செய்யச் சொல்லிப் பார்த்தார்.

அவருக்குச் சில விஷயங்களில் நம்பிக்கையில்லையானாலும், தம் அருமை மனைவி எப்படியாயினும் மரணப் படுக்கை