பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தும்பைப் பூ

135


யிலிருந்து மீண்டு எழுந்தால் போதும் என்ற ஆதங்கத்தோடு மற்றவர்கள் சொல்லியபடியெல்லாம் மணி, மந்திர, ஒளஷத முறைகள் அனைத்தையும் கையாண்டு பார்த்துவிட்டார். ஆனால் ஆயிரக்கணக்கில் பணம் செலவானது தவிர, அலுப்பு சலிப்பு இல்லாமல் யார் யார் என்ன சொன்னாலும் யாரைப் பற்றிச் சொன்ஞலும் அவர்கள் சொல்லுகிற வைத்தியர்களையும், மந்திரவாதிகளையும், ஜோதிடர்களையும் அலைந்து திரிந்து போய் அழைத்து வந்து பார்த்து ஏமாந்தது தவிர, திலகவதி யம்மாள் படுக்கையிலிருந்து இம்மியளவுகூட எழுந்திருக்கவில்லை. எந்தவிதமான சிகிச்சையாலும் மருந்து மாயங்களாலும் சதானந்தம் பிள்ளையின் மனைவி சிறிதளவும் குணமடையாததைக் கண்டு எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள். சில மருந்துகளால், மணி மந்திரங்களால், சில சமயம் நோய் சிறிது குணமாவதுபோல் காணப்படும். இரண்டு நாள் கழித்து மறுபடியும் நோய் முடக்கிக் கொள்ளும். இந்த விதமான விசித்திர நிலை, பொதுவாக உறவினர், அக்கம் பக்கத்து மனிதர்கண் மட்டுமல்லாமல், வைத்தியர்களையும் மந்திரவாதிகளையும் லியப்பில் ஆழ்த்தியது; இதிலிருந்து, திலகவதியம்மாளுக்கு உடம்பில் மட்டும் முடக்குவாதமில்லை உள்ளத்திலும் முடக்கு வாதம் பிடித்துக் கொண்டிருக்கிறது என்றே தோன்றியது. உடற்பிணிக்கு மணி மந்திர ஒளஷதம் பிடிக்கும். மனப்பிணிக்கு எப்படிப் பிடிக்கும்? நோய் ஒன் றிருக்க மருந்தொன்று கொடுத்தால் குணமாகுமா? மன நோய்க்கும் மருந்து உண்டோ? மகளுல் ஏற்பட்ட மன அதிர்ச்சியால்தான், மனக் கவலையால்தான் ஏற்கனவே, உடல் நலிவுற்றிருந்த திலகவதியம்மாள் இப்போது திரா நோய்க்காளானாள். மனநோய் முற்றிய தால் உண்டான உடற்பிணிக்கு மருந்துகளைக் கொடுப்பதை விட முதலில் மனப்பிணி அகல மார்க்கஞ் செய்தால் பூரண குணம் ஏற்படும். ஆனால் அதற்கு வழி யாரும் செய்யவில்லை. ஏனென்ருல் திலகவதியம்மாளை உள்ளுர அரித்துவரும் மன நோயை-மற்றவர்கள் - மணுளன்கூட அறியாததுதான்