பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138

தும்பைப் பூ

1 கொள்ளவில்லை. பிள்ளைகளை நினைக்கும்போதுதான் அவள் பெருங்கவலை கொண்டாள். சிறு வயதிலேயே- படிக்கும் போதே-இவர்களுக்கு எதற்காக அரசியல் விவகாரங்கள்? கட்சிகளில் கலந்து கொண்டு கூச்சல் போடுவதேன்? நல்லது, கெட்டது என்று இன்னமும் சரியாகத் தெரியாத நிலையில் இவர்கள் பொது விஷயங்களில் ஈடுபடுவது கூடாது. ஆனால், அவர்கள் இதைக் கேட்க மாட்டார்கள் போலிருக்கிறதே! பெரியவன்தான் ஒரு தினுசாய்ப் போய் விட்டான் என்ரு லும், சின்னவனும் அதைவிட மோசமாகவல்லவா இருக்கிறான்? ஆனால் விசுவம், சிவனைப் போலப் பரீட்சையில் கோட்’ அடிக்கவில்லை. எப்படியோ எழுதிப் பாஸாய் விடுகிறான்; மேல் படிப்பில் எப்படி இருப்பானே?......' என்று பெற்ற பிள்ளைகளை எண்ணித்தான் அவளுடைய தாயுள்ளம் பெரும் பேதுற்றது. பி.எஸ்.ஸி. ஆனர்ஸ் பரீட்சையில் பாஸாகாமல் போன தற்குப் பொதுவிவகாரங்களில் ஈடுபட்டதுதான் காரணம் என்று தந்தையார் படித்துப் படித்துச் சொல்லிக் கண்டித்துங் கூட, சிவகுமாரன் தன் போக்கை மாற்றிக் கொள்ளாமல், அரசியலில் அதிகமாக ஈடுபட்டு வருவதை அறிந்து திலகவதியம்மாள் வெகுவாக வருந்தினாள். வெளிப் பார்வைக்குத் தான் எதிலும் கனக்காதது போல் பாவனை செய்து வந்தாலும், அந்தரங்கத்தில் அவன், அரசியல், சமூகக்கிளர்ச்சிகளில் தீவிரமாகக் கலந்து வேலை செய்து வருகிறான் என்ற செய்தி பிள்ளையவர்களுக்கு மாசிலாமணி முதலியார் முதலியவர்கள் வாயிலாக எட்டத்தான் செய்தது. சிவகுமாரன் கம்யூனிஸ்டு கட்சியிலும், விசுவநாதன் திராவிட முன்னேற்றக் கழகத்திலும் சேர்ந்து முக்கிய பங்கெடுத்துக் கொள்கிறார்கள் என்பது திட்டவட்டமாகத் தெரிந்துவிட்டது. தகப்பன் காங்கிரஸ்காரர்; பிள்ளைகள் காங்கிரஸ் சக்கு நேர்விரோதமான கட்சிகளில்-காங்கிரஸ் செல்வாக்கைக் குலைப்பதையே குறிக்கோளாக் கொண்ட எதிர்க்கட்சிகளில் - சேர்ந்திருக்கின்றனர்' என்று சதானந்தம் பிள்ளையவர்களைக் குறை கூற முயன்றவர்கள் கேலியாகச் சொல்லலாயினார்.