பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

தும்பைப் பூ

சொன்ன சிவகாமியம்மாள், “சரி, சரி, நேரமாய் விட்டது. வா போகலாம்” என்று கூறி வெளியே அழைத்துப் போனாள்.

போர்ட்டர்கள் உள்ளே படை யெடுத்தது போல வெளியேயும் வண்டிக்காரர்கள் இவர்களை முற்றுகையிட்டதைக் கண்டு. மங்கையர்க்கரசி திகைத்துப் போனாள். ஆனால் உலக அனுபவம் வாய்ந்த சிவகாமியம்மாள் “வெளியூர்ப் பெண்கள்தானே! வெகு சுலபமாக ஏமாற்றிவிடலாம்” என்று வாய்ச் சவடால் அடித்த வண்டிக்காரர்களை யெல்லாம் விரட்டிவிட்டு யோக்கியனான ஒருவனுடைய வண்டியை வாடகைக்கு அமர்த்திக் கொண்டாள்.

போகும் வழியெல்லாம் மங்கையர்க்கரசி குழந்தை போலக் கட்டிடங்களையும் மற்றும் காட்சிகளையும் மனிதர்களையும் வெறித்துப் பார்த்துக் கொண்டு போகலானாள்.

வண்டி சிந்தாதிரிப்பேட்டை வாராவதிப் பக்கமாகத் திரும்புகையில், சிவகாமியம்மாள், “மங்கை, அதோ பார், இரண்டு கடியாரக் கோபுரங்கள் தெரியல்லை? சிவப்புக் கோபுரம் பெரிய ரயில்கள் போகிற ஸ்டேஷன். இந்த ஸ்டேஷனைப் போல—ஏன்? இதைவிட மிகப் பெரிசு அது....... வெள்ளைக் கோபுரம், கார்ப்பொரேஷன் கட்டிடத்தினுடையது...... இதையெல்லாம் நீ பின்னாலே பார்க்கலாம்.......” என்று சொன்னாள்.

மகளுக்கு முக்கியமாகத் தெரிவிக்க வேண்டுமென்று நினைத்தவற்றை யெல்லாம் சிவகாமியம்மாள் சொல்லிக் கொண்டே போனாள். மங்கையர்க்கரசியும் சிலவற்றைப் பற்றித் தாயைக் கேட்டு அறிந்து கொள்ளலானாள்.

கோமளேஸ்வரன் பேட்டை வாராவதியை வண்டி கடந்ததும், மவுண்ட் ரோடிலுள்ள சினிமாக் கொட்டகைகளையும், பெரிய பெரிய கம்பெனிகளையும், வியாபார ஸ்தலங்களையும் பார்த்து மங்கையர்க்கரசி முன்னைவிட வியப்படைந்தாள். சிவகாமியம்மாள் தனக்குத் தெரிந்த