பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140

தும்பைப் பூ

 இதைக் கண்டும் காணாமல், அறிந்தும் அறியாமல் போவது தான் நல்லது என்று அவள் எண்ணினாள். பிள்ளைகள் தன் கணவனை எதிர்த்துக் கொள்ளும் நிலை ஏற்படக் கூடாதே, கடவுளே! என்று அவள் பிரார்த்திக்கலானாள்.

ஆனாலும் திலகவதிக்குச் சிவன்மீது மனத் தாங்கல் ஏற்படத்தான் செய்தது. எந்த மகன் பரீட்சையில் பெயிலாய் விட்டதைக் கேட்டு -பெயிலானதற்கு இன்னதுதான் காரணம் என்று அறிந்து-ஆட்சியிலுள்ளவர்கள் அவன்மீது அடக்குமுறையைக் கையாளக்கூடும் என்று கேட்டு அவள் அஞ்சினாளோ-அந்த அச்சத்தாலேயே அதிர்ச்சியடைந்து முடக்கு வாதத்தில் முடங்கி விட்டாளோ-அந்த மூத்தமகன் தன்னைப்பற்றி அவ்வளவாகக் கவலை கொள்ளாமல் தான் தோன்றித்தனமாகத் திரிந்து விட்டு வருவது-செப்டம்பரில் பரீட்சை எழுதிப் பூர்த்தி செய்யப் போகிறேன் என்று சொல்லிப் பின் அவ்விதம் செய்யாமல்- சரியாகப் படிக்கவில்லை; நன்ருகப் படித்து மார்ச்சு பரீட்சைக்குப் போகிறேன்' என்று கூறி வீண் பொழுது போக்கிக் கொண்டு தந்தையின் நற்பெயரையும் குடும்பக் கெளரவத்தையும் கெடுத்து வருவது அவளால் சகிக்கக்கூடாததாய் விட்டது. அதை நினைத்து நினைத்தே அவள் நெக்குருகி விட்டாள். இவ்விதம் மன நோய் முற்ற முற்ற உடலைப் பற்றிய வியாதி எப்படிக் குணப்படும்? எந்த மருந்துதான் எப்படிப் பிடிக்கும்? ஆகவே, அவள் உடல் நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டு தான் வந்தது. வந்தது இந்நிலையிலும் அவளுக்கு ஒரே ஒரு ஆறுதல் மங்கையர்க்கரசி ஒன்றுவிட்ட சகோதரியாயிருந்தும் உடன் பிறந்த சகோதரியைவிட உறுதுணையாயிருந்து வரும் மங்கையர்க்கரசி தன் குடும்ப நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு திறமையாக நடத்தி வருவதும், தன் கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் யாதொரு குறைவுமின்றி அக்கரையாகக் கவனித்துக் காரியங்களைச் செய்து வருவதும் கண்டு விம்மிதமுற்றாள். அத்துடன் மங்கை சிறு பிள்ளைகளை நன்கு பராமரிப்பதோடு சமயம் நேரும்போது சிவகுமாரனுக்