பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

தும்பைப்பூ

போலாய் விட்டது. மங்கையர்க்கரசியின் உருவம் அவ்வளவு அழுத்தமாக அவர் உள்ளத் திரையில் பதிந்து விட்டது. "இளமை கொழிக்கும் எழில் தோற்றம்! ஆனால் சோபையிழந்த மதிமுகம். வெள்ளைக் கலையுடுத்தி வாணி போல் விளங்கும் அவ்வனிதையின் வதனத்தில் வாட்டம் ஏன்?" அந்தச் சில விநாடிகயில் அவளைக் குறித்து அவருடைய மனம் என்னென்னவோ கேள்வியெல்லாம் அவரைக் கேட்டு நச்சரித்து விட்டது. தான் பார்த்த பெண் - தன் உள்ளத்தைக் கவர்ந்தபெண் - அமங்கலி - விதவை - என்று அறிய அவருக்கு வெகு நேரமாகவில்லை. ஐயோ! இவ்வளவு இளவயதில் இந்த அலங்கோல வைதவ்யம்! பாழாய்ப் போன நம் நாட்டுக்கு இது ஒரு பெருமை போலும்" என்று அவர் மனம் அங்கலாய்த்தது.

'இந்தப் பெண் யார்? உடன் வந்திருக்கும் கிழவி யார்! திலகவதிக்கு என்ன வேண்டும்? எங்கிருந்து வந்திருக்கிறார்கள். என்ன காரியமாக வந்திருக்கிறார்கள்?' என்று கேள்விகளைச் சரமாரியாகப் போட்ட அவர் உள்ளம் அடுத்த கணம், 'இதென்ன பைத்தியக்காரக் கேள்வி? சுற்றத்தார் சொந்தக்காரர்கனா யிருந்தால் சாதாரணமாக வருவார்கள் தான். காரியமில்லா விட்டால் உறவினரைப் பார்க்க வரக் கூட்டாதோ?' என்று பதில் கேள்வி போடலாயிற்று.

இவ்விதம் மன அரங்கத்தில் நடக்கும் போரைக் வனித்துக் கொண்டிருந்த சதானந்தம் பிள்ளையை, "ஊரிலிருந்து யாரோ வந்திருக்கிறாங்க, நீங்கள் பார்த்தீங்கள அப்பா?" என்று கணேசன் வந்து கேட்ட கேள்வி திடுக்கிட்டு விழிப்புறச் செய்தது.

"யாரு ராஜா!"

"யாரோ பாட்டியாம்; சின்னம்மாவாம், அம்மா சொன்னாங்க."

"பாட்டியா?" - என்று யோசனையோடு கேட்ட சதானந்தம் பிள்ளை, பாட்டியுடன் வந்திருப்பது யாரென்று சொன்னூர்கன் இன்னம்மா என்று?..." என்று கேட்டார்.