பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


தும்பைப் பூ


1

லகமெங்கணும் ஒளி பரப்பி உயிர்களையெல்லாம் வாழ்விக்கவேண்டி, செங்கதிரோன் கீழ்வானிலிருந்து அவசர அவசரமாகப் பவனி வந்து கொண்டிருந்தான். “கீங், கைங்” எனக் கடற் பறவைகள் கீச்சிடுவது உதயகீதம் பாடி, சூரியனை வரவேற்பது போலிருந்தது. நீலவானில் திட்டுத் திட்டாகத் தென்பட்ட வெண்மேகங்களிலும் கருங்கடலிலிருந்து கணத்துக்கொருதரம் கிளம்பிக் கரை புரண்டு வரும் அலைகளிலும் செஞ்ஞாயிற்றின் ஒளி பிரதிபலித்தது. கடற்பரப்பில் மிதந்தவாறு கட்டுமரங்கள் கரை நோக்கி விரைந்துவந்து கொண்டிருக்கும் அழகு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. முன்னாள் மாலையில் மீன் பிடிக்கச் சென்ற செம்படவர்கள் எதிர்பார்த்ததைவிட ஏராளமாக மீன்கள் வலைகளில் பிடிபட்டதாலோ என்னவோ, கட்டுமரங்களைத் துடுப்புகளால் துரிதமாகத் தள்ளிக்கொண்டு தெம்மாங்கு பாடியவாறு தெம்பாக வந்து கொண்டிருந்தனர். கட்டு மரங்