பக்கம்:துளசி மாடம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 99


'கவனமாக... ... ரெக்கார்டரிலே தோல் உ ைற மேலே போட்டிருக்கு... மாமி கிட்டக் .ெ கா ண் தி போயிடாதே...தோல் மேலே பட்டுட்டா மாமி மறுபடி

யும் ஸ்நானம் பண்ணப் போயிடுவா..." என்று வசந்தி கமலியின் காதருகே மெல்லிய குரலில் எச்சரிக்கவும் செய்தாள்.

தான் ச ற் று மு ன் பாடியதெல்லாம் காஸெட் ரெக்கார்டரிலிருந்து திரும்ப ஒலிக்கவே மாமி சிறிது நாணினாற்போல உட்கார்ந்து தன் குரலையே கேட்டுக் கொண்டிருந்தாள். பெரு மதிப்புக்குரிய ஒரு குருவுக்கு முன்னால் அமர்ந்திருக்கும் மாணவி போல் பல்யமாக விலகியிருந்து, மரியாதையோடு மாமியின் முகத்தையே கவனித்துக் கொண்டிருந்தாள் கமலி. பருகுவது போன்ற ஆர்வம்' என்பார்களே அந்த ஆர்வம் கமலியின் பார்வை யில் அப்போது தெரிந்தது. -

தெரு வாசலில் கார் வந்து நிற்கும் ஒசை கேட்டது. அதை அடுத்து வேணுமாமாவின் குரலும் திண்ணை யிலேயே சிரம பரிகாரம் பண்ணிக் கொண்டிருந்த விசுவேசுவர சர்மா அவரை வரவேற்கும் குரலும் உள்ளே தெளிவாகக் கேட்டன.

"அப்பா பக்கத்து கிராமத்திலே ஒரு கல்யாணத் துக்குப் போயிருந்தார், இப்பத்தான் திரும்ப முடிஞ்சது போலிருக்கு" என்று கூறியபடியே வாயிற் பக்கமாக எழுந்து போனாள் வசந்தி.

"என்ன வசந்தி ? எக்ஸ்டேர்னல் அ..பயர்ஸ். இண்டேர்னல் அ..பயர்ஸ் எல்லாம் எப்படி இருக்கு : ரிலேஷன்ஸ் இம்ப்ரூவ் ஆறதா இல்லியா ?" -

அப்பா தன்னிடம் என்ன கேட்கிறார் என்று வசந்தி உடனே புரிந்து கொண்டு விட்டாள். -

'கல்சுரல் எக்ஸ்சேஞ்ஜ் புரோகிராம் மட்டும் சரியா நடந்துண்டிருக்குப்பா மா மி அம்மானைப் பாட்டுப் பாடி கமலி அதை ரெக்கார்டு பண்ணி மாமிக்கே திருப்பிப் போட்டுக் காமிச்சிண்டிருக்கா,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/101&oldid=579817" இலிருந்து மீள்விக்கப்பட்டது