பக்கம்:துளசி மாடம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 107


நதிக் கரையிலுள்ள கிராமங்களில் pர்னோத்தாரணம் செய்ய வேண்டிய நிலையில் பாழடைந்திருக்கும் எல்லாக் கோவில்களைப் பற்றிய விவரங்களையும் உடனே திரட்டி அனுப்புமாறு கோரியிருந்தார் பூரீ மடம் மேனேஜர். சுவாமிகளின் ஆக்ஞைப்படி அக்கடிதம் எழுதப்படுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

கடிதங்களை வீட்டுக்குள் கொண்டுபோய் வைத்து விட்டுச் சந்தியா வந்தனத்துக்காக ஆற்றங்கரைக்குப் புறப்பட்டார் சர்மர். ஆறறங்கரையில் சந்தியா வந்தன ஜபதபங்களை முடித்துக்கொண்டு வீடு திரும்புகிற வழியில்தான் இறைமுடிமணியின் வி ற குக் க ைட இருந்தது.

கடையில் கூட்டமில்லை. அநேகமாகக் கடை மூடுகிற நேரமாயிருக்க வேண்டுமென்று தோன்றியது. இறைமுடிமணியின் இயக்க சம்பந்தமான ஆட்கள் சிலர் சுற்றி உட்கார்ந்து அவரிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். கடை வாசலில் விசுவேசுவர சர்மாவைப் பார்த்ததும் இறைமுடிமணியே எழுந்திருந்து எதிர் கொண்டு வந்து விட்டார்.

“என்ன சமாசாரம் விசுவேசுவரன் ? சொல்லியனுப்பி யிருந்தா நானே வந்திருப்பேனே ? நீ ஏன் இங்கே சிரமப் பட்டு அலையனும் ?" -

"இதுக்குன்னு வரலே தேசிகாமணி ஆத்தங் கரையி லேருந்து திரும்பிப் போற வழியிலே வந்தேன். நீ வாட கைக்குக் கேட்டியே அந்த வடக்குத்தெரு கா லி மனை... அது விஷயமா மடத்திலேருந்து பதில் வந்துடுத்து."

"என்னான்னு வந்திருக்கு?" "ஒழுங்கா வாடகை கொடுக்கிற பார்ட்டி யாரா யிருந்தாலும் நானாப் பார்த்து வாடகைக்கு விட்டுக்க லாம்னு எழுதியிருக்கா. " -

"நான் ஒழுங்கா வாடகை கொடுக்கிற பார்ட்டீன்னு நீ நம்புறியா இல்லையா ?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/109&oldid=579825" இலிருந்து மீள்விக்கப்பட்டது