பக்கம்:துளசி மாடம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 துளசி மாடம்


சிலை போல் கவர்ச்சியாயிருந்த அந்தப் பெண் மலர்க் கொடியிடம் சீமாவையர் தப்பாக நடந்து கொண்டிருப் பாரா இல்லையா என்று சர்மா ஒரு சிறிதும் சந்தேகப் படவே இல்லை. சீமாவையர் ேபா ன் ற கோவில் காளை மேய்வதை ஒத்த தான்தோன்றித் தனமான மேய்ச்சல் குணமும் திமிருமுள்ளவர்கள் சிலரை அவர் அறிவார். அவர்களால் கிராமத்தின் பெயரே கெட்டுக் கொண்டிருந்தது. சில இடங்களில் அவமானப்பட்ட பின்பும் அவர்களுக்குப் புத்தி வந்ததாகத் தெரியவில்லை. இம்மாதிரிக் காரணங்களால் தான் மடத்துப் பொறுப்புக் கள் சீமாவையரிடமிருந்து விரைந்து பறிக்கப்பட்டன. ஆனால் சீமாவையரோ தான் தவறுகள் செய்ததால் தான் அந்தப் பொறுப்புக்கள் தன்னிடமிருந்து பறிக்கப் பட்டன என்று உணர்ந்ததாகத் தெரியவில்லை. தனக்கு எதிராக விசுவேசுவர சர்மா சதி பண்ணி மடத்து நிர்வாகத்தைச் சரிக்கட்டி அவர்கள் தயவில் அதை அடைந்திருப்பதாகவே கற்பனை செய்து கொண்டிருந் தாா. -

'மனிதன் சில வேளைகளில் காமுகனாகவும் இருக்க லாம். ஆனால் எல்லா வேளைகளிலும் காமுகனர்கவே திரியும் ஒரு மிருகம் எப்படி மனிதனர் இருக்க முடியும் ?" என்று பொருள்படும் ஒரு பழைய நீதி ஸ்லோகம்

உண்டு இப்போது அது சர்மாவுக்கு நினைவு வந்தது. சீமாவையர் போன்றவர்கள் மேல் த ட் டு க்க ளில் தோன்றினால் அவர்களைத் தி ரு த் த இறைமுடிமணி களும் தோன்றத்தான் வேண்டும் என்று இப்போது சர்மாவே கோபமாக நினைத்தார். கோவில் காளைகள்ை யாராவது பிடித்துப் பவு எண் டி ல் அடைக்கத்தான் வேண்டும் என்றும் தோன்றியது.

பொதுவாக சர்மா விளக்கு வைத்த பின் சமைத்த பண்டம் எதுவும் சாப்பிடுவது இல்லை. கறந்த பகவின் பாலும் இரண்டு வாழைப் பழமுமே அவரது இரவு உணவு, வீடு சென்று அந்த இரவு உணவை முடித்துக் கொண்டு குத்தகைதாரர் கூட்டம் நடக்க இருந்த பூர் மடத்தின் விவாக மண்டபம் கட்டிடத்துக்குப் புறப்பட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/112&oldid=579828" இலிருந்து மீள்விக்கப்பட்டது