பக்கம்:துளசி மாடம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி இ 181

"ஸ்டாம்ப் பேப்பர் நானே கொண்டாந்திருக்கேன். எழுத வேண்டியதை எழுதிக்கலாம். கடையை என் மருமகன்தான் நடத்தப் போறான்னாலும் 'அக்ரி மெண்ட் என் பேருக்கே பண்ணிக்குவோம்."

“ரெண்டு மாச அட்வான்ஸ் வேணும்னு ரீமடத்தி லேருந்து உத்தரவு. கட்டிட வேலையோ, டெம்பரரி ஷெட்டோ எதுன்னாலும் இடத்தை வீஸ்-க்கு எடுத்துக்குற பார்ட்டி தன் செலவிலேயே போட்டுக்க லும்னு நிபந்தனை..."

"எனக்கு முழுச் சம்மதம். அட் வான்ஸ் பணம் இதோ கொண்டாந்திருக்கிறேன்."

சர்மாவுக்குப் பதில் சொல்லிவிட்டுப் பணத்தை எடுத்து எண்ணத் தொடங்கினார் இறைமுடி மணி. யாரோ படியேறுகிற செருப்புச் சத்தம் கேட்டது. ஒரே சமயத்தில் இறைமுடிமணி, சர்மா இரண்டு பேருமே நிமிர்ந்து பார்த்தார்கள். ஜவுளி வியாபாரி அஹமத் அலி படியேறிக் கைகூப்பிவிட்டுச் செருப்பை ஒரமாகக் கழற்றிக் கொண்டிருந்தார். சர்மா பதிலுக்குக் கை கூப்பிவிட்டு, "ஏது இவ்வளவு தூரம் ” என்று அஹமத் அலியைக் கேட்டார். அஹமத் அலி சிரித்துக் கொண்டே, 'உங்க தயவுதான் வேணும். இந்தாங்க” என்று ஒரு கடிதத்தை எடுத்துச் சர்மாவிட ம் நீட்டினார். "சீமாவையர் சார் உங்களைப் பார்த்து இதைக் கொடுக்கச் சொன்னாருங்க...” -

கடிதத்தை வாங்கிப் பிரித்துப் படிக்கலானார் சர்மா. கடிதத்தில் இருந்த விஷயங்களினால் ஏற்படும் உணர்ச்சியை முகமோ கண் பார்வையோ காட்டிக் கொடுத்து விடாமல் சர்மா சுபாவமாக இருக்க முயன்றார்.

"லெட்டரைப் பார்த்துட்டேன்னு சீமாவையர் கிட்டச் சொல்லுங்கோ. நானே அப்புறமா உங்களுக்கு விவரம் சொல்லியனுப்பறேனே ?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/133&oldid=579849" இலிருந்து மீள்விக்கப்பட்டது