பக்கம்:துளசி மாடம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 துளசி மாடம்


தது. இருவருடைய பிரியங்களிலும், அந்தரங்கங்களிலும் அவருக்குச் சந்தேகம் எதுவும் இருக்கவில்லை. வெறும் உடல் சம்பந்தப்பட்ட பரஸ்பரக் கவர்ச்சி என்று மட்டும் அதை நினைக்க முடியவில்லை. உடலையும் த விர அறிவுக்கும் ஒத்த உணர்வுகளுக்கும், ஒத்த எண்ணங் களுக்கும், இந்தக் காதலில் அதிக சம்பந்தம் இருப்பது புரிந்தது. .

காமாட்சியால் இதை வெறுக்க முடிந்ததுபோல் அவரால் இதை வெறுக்க முடியவில்லை. பூரண ஞானத் தின் கனிவு எந்த மனத்தில் நிரம்பியிருக்கிறதோ, அந்த மனத்தில் மிகவும் கொச்சையான வெறுப்புக்களும், தூஷணைகளும் ஒரு போதும் வருவதே இல்லை. எங்கு கொச்சையான வெறுப்புக்களும், துாஷணைகளும் நிரம்பி யிருக்கிறதோ அங்கே பூரண ஞானம் இருப்பதில்லை. கொச்சையான வெறுப்புக்களும் துாஷணைகளும் பூரண ஞானத்தை அழித்து விடுகின்றன. 'தூஷணம் ஞான ஹீனம்-என்பதை அவர் நினைத்தார்.

வெளியே போயிருந்த ரவி திரும்பி வந்தான். வாசல் திண்ணையிலிருந்த சர்மா அங்கேயே அவனை எதிர் கொண்டு தடுத்து உட்கார வைத்து விட்டார்.

'உன்னை அப்பவே ஆத்தங்கரைக்குப் போறப்போ தேடினேன். நீ ஆப்படலே. எனக்குத் தனியாக உங் கிட்டக் கொஞ்சம் பேசனும்."-- -

மூணாவது வீட்டுச் சுந்தரராமன் கூப்பிட்டான், போய்ச் சித்த நாழி பேசிண்டிருந்துட்டு வந்தேன்."

"நாம இங்கேயே பேசலாமா ? இல்லே மறுபடியும் ஆத்தங்கரைக்கே பொறப்பட்டுப் போலாமா ?”

"ஏன் ? பொழிக்கடைத் தோட்டத்துக் கிணத்தடியி லேயே உட்கார்ந்து பேசலாமே அப்பா !”

".வா...சொல்றேன் في 8 يوهه

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/154&oldid=579870" இலிருந்து மீள்விக்கப்பட்டது