பக்கம்:துளசி மாடம்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 155


“எனக்கு ஆட்சேபணையில்லே. ஒரு வருஷம் நீ ஊர்ல தங்கப்போறேங்கிறதைப் பத்தி எனக்கு ரொம்ப "س-r#G Erraphه

"பின்னே நீங்க எதைப்பத்திக் கவலைப்படறேள்னு புரியலையே அப்பா ?”

"லெளகீகமே தெரியாத ஒரு பழைய காலத்துப் பொம்மனாட்டியோட ஆதிக்கத்திலே இதே வீட்டில் இருந்துண்டு உங்களாலே நிம்மதியா அதைச் செய்ய முடியுமான்னுதான் கவலைப்படறேன். என் தயக்க மெல்லாம் விருந்தாளியா வந்திருக்கிறவளோட மனசு கொஞ்சமும் நோகப்படாதுங்கறதுதான் :

"கமலி விருந்தாளி இல்லே. இதுவரை எப்படி யானாலும் இனிமே இந்த வீட்டிலே அவளும் ஒருத்தி..."

14

சர்மா சிறிது தயக்கத்துக்குப் பின் மீண்டும் ரவியைக் கேட்டார் :

"நீ சொல்றே. அதை நான்கூட ஒத்துண்டுட றேன்னே வச்சுக்கோ. உங்கம்மா ஒத்துக்கனுமேடா ? அவளுக்கு இன்னம் முழுவிவரமும் தானாவும் தெரியலே. தெரிவிக்கப்படவும் இல்லே. அதுக்குள்ளேயே ஆயிரம் சந்தேகப்படறா... உங்கம்மாவுக்குப் பயந்து முதல்ல்ே உன் லெட்டர் கிடைச்சதும் நானும் வேணுமாமாவுமாகக் கலந்து பேசி உன்னையும் கமலியையும் அவர் வீட்டு மாடியிலேயே தங்க வச்சுடலாமான்னுகூட ஆரம்பத்திலே யோசிச்சோம்."

"இப்போ புரியறது அப்பா !... நாங்க ரெண்டு பேருமாத் தொடர்ந்து இங்கேயே தங்கியிருக்கிறது சாத்தியமான்னுதானே நீங்க கேக்கறேள்?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/157&oldid=579873" இலிருந்து மீள்விக்கப்பட்டது