பக்கம்:துளசி மாடம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 17


“உங்கண்ணா சுரேஷ் பாரிஸிலேயே இருக்கானே: அவனுக்கு உங்கப்பாவை விட்டுத் தகவல் எழுதச் சொன்னா ஏதாவது பிரயோஜனப்படுமோ...?’’

"எங்கப்பா எதை எழுதி, அண்ணா என்ன செய்ய ணும்னு நீங்க எதிர் பார்க்கறேள் மாமா?..."

"ரவியும் அந்தப் பெண்ணும் இங்கே புறப்படறதுக்கு முந்தி சுரேஷ் அங்கேயே அவான்னப் பார்த்துப் பேசி ஏதாவது பண்ணலாமோன்னு தோணித்து...அது சாத் தியமா இல்லையான்னு நீதான் சொல்லணும்..."

"நீங்க கேக்கற விஷயத்தைப் பத்தி என்ன பதில் சொல்றதுன்னே எனக்குத் தெரியலையே மாமா நம்ம தேசத்துக்கும் ஐரோப்பா, அமெரிக்கா போல இருக்கிற மேனாடுகளுக்கும் இந்த மாதிரிப் பிரச்சினைகளை அணுகறதிலேயே ரொம்ப வித்தியாசம் உண்டு. இங்கே யிருந்து போய் அங்கே வசிக்கறவாளுக்குக் கூட நாளாக நாளாக அந்த தேசங்களின் தாராள மனப்பான்மை, பெர்மிஸில்னெஸ் எல்லாம் வந்துடறது. உங்க பிள்ளை ரவியும் கமலியும் காதலிக்கிறதைப் பத்திச் சுரேஷ் அண்ணாகிட்டச் சொன்னா, அவன் அப்படியா...? ரொம்ப நல்லது அதிலே என்ன தப்பு...? ரவியோட அதிர்ஷ்டத்தைப் பாராட்டுகிறேன். பான். இந்தப் பிரச்னையை நீங்க அணுகற விதத்தை அவாளுக்கெல்லாம் புரிய வைக்கறது. ரொம்ப சிரமமான காரியம் மாமா ! அப்படியே புரிஞ்சாலும் உங்க தரப்பு வாதங்களை இன்னிக்கு நாகரிக உலகத்திலே அவாள்ளாம் ஒத்துக்க மாட்டா..."

'சங்கரமங்கலம் வியாகரண சிரோன்மணி குப்புசாமி சர்மாவோட பேரன்-இப்பிடி ஒரு வெள்ளைக்காரியைக் கட்டிண்டு வீட்டுக்கு அடங்காமப் போயிட்டானாம்னு நாலு பேர் பேசுவாளே அம்மா...? நம்ப சமஸ்காரம், சம்பிரதாயம் எல்லாத்தையும் விட்டுட்டு அவன் இப்படிச் செய்யலாமா...? நாளைக்கு நானோ அவனோட அம்மாவோ-போயிட்டா எங்களுக்குக் கர்மம் எல்லாம் பண்ண வேண்டிய பிள்ளையாச்சே அவன்?'

இl-2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/19&oldid=579734" இலிருந்து மீள்விக்கப்பட்டது