பக்கம்:துளசி மாடம்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி e 21

“சரி ! நீங்களே சொல்றப்போ நான் வேற என்ன பண்றது ? பதில் எழுதலே ; விட்டுடறேன்."

"ஒய் ! சர்மா ! தைரியமா இரும். உம்மைப் போல ஞானவான்கள் எல்லாம் வெறுமனே பூச்சாண்டி காட்டற வாளுக்குக்கூடப் பயப்படறதாலேதான் மத்தவா குதிரையேற முடியறது. கமலியையும் ரவியையும் இங்கே புற ப் பட் டு வரச்சொல்றதுக்கே பயந் தேன். அப்பவும் நானும் என் பொண்ணும்தான் வரச் சொல்லி எழுதும் பயப்படாதேயும்’னு உமக்கு உறுதி சொன்னோம். இப்பவும் நான் சொல்றேன் பயப் படாதேயும் பயமே இல்லாத கெட்டவனைக் கூட மதிச்சுப் பணிந்து விட்டுக் கொடுத்து விடுவதும் பயந்த சுபாவமுள்ள ஒரு நல்லவனைத் தொடர்ந்து மிரட்டிக் கொண்டேயிருப்பதும் வழக்கமாகிவிட்ட தேசம் இது!'

"பல சமயங்கள்ளே என்னோட சாத்வீக குணத்தை நீங்க பயம்னு தப்பாப் புரிஞ்சுக்கறேன். நான் நீங்க நினைக்கறதுபோல அத்தனை பயந்தவன் இல்லே. பயந்தவனா இருந்தாத் துணிஞ்சு பிள்ளையையும் கமலி யையும் வரவழைச்சு ஆத்திலேயே தங்க வச்சிண்டிருக்க மாட்டேன். எங்காத்துக்காரியே அதற்குக் கடும் எதிர்ப்பு ஒய் பயந்தவனா இருந்தா மடத்து இடத்தை இறைமுடிமணிக்கு வாடகை பேசி விட்டிருக்கமாட்டேன். நிலங்களைச் சீமாவையரின் பினாமி ஆட்களுக்குக் குத்தகை அடைக்க மறுத்து நியாயமான விவசாயிகளுக்கு விட்டிருக்க மாட்டேன். என் தைரியத்தை நானே

விளம்பரப்படுத்தப்படாது..." -

வேனுமாமா சர்மாவை நிமிர்ந்து பார்த்தார்.

"சபாஷ் இப்போதான் நீ உண்மையான வேதம் படிச்ச பிராமணர் தைரியமில்லாத ஞானம் சோபிப்பது இல்லை. தப்பாக வேதம் படித்தவனைவிட நன்றாகச் சிரைப்பவனே மேல்னு மகாகவி பாரதியார் எதிலியோ எழுதியிருக்கார் ஒய் !"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/213&oldid=579929" இலிருந்து மீள்விக்கப்பட்டது